Biggboss Tamil Season 9, Day 4: ஓயாத தண்ணீர் பிரச்சனை.. கெமி – பார்வதி மோதல்.. த்ரிஷா குறித்து கூறிய ப்ரவீன் காந்தி.. நந்தினியின் அழுகை.. வழக்கம்போல் அட்ராசிட்டி செய்த திவாகர்.. கலகலப்பும் கண்ணீருமாக போன பிக்பாஸ் 4ஆம் நாள்..

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியி 9-ன் நான்காம் நாள், வீட்டுக்குள் பல புதிய சர்ச்சைகளையும், முதல் வாரத்திலேயே ‘குறும்படத்தையும்’ கொண்டு வந்தது போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் சுவாரஸ்யத்தை தூண்டியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்தின் முதல்…

BB Day 4

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியி 9-ன் நான்காம் நாள், வீட்டுக்குள் பல புதிய சர்ச்சைகளையும், முதல் வாரத்திலேயே ‘குறும்படத்தையும்’ கொண்டு வந்தது போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் சுவாரஸ்யத்தை தூண்டியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்தின் முதல் பிரச்சனை தண்ணீர் பற்றாக்குறை தான். இதற்கு முக்கியக் காரணம், வாட்டர் மேனேஜ்மென்ட் பொறுப்பை சரியாகக் கவனிக்காமல் அதிகாலையில் தூங்கிவிட்டார் கம்ருதீன். இதனால் ஒட்டுமொத்த வீட்டிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த பிரச்சனையின் தீவிரத்தை காட்ட, பிக்பாஸ் வீட்டிலுள்ள அனைவரையும் கூட்டி, செய்த தவறை குறும்படம் போட்டு காட்டினார். வாட்டர் மேனேஜ்மென்ட் டீமில் உள்ள கம்ருதீன், சபரி ஆகிய இருவரும் ஐந்து முறை தங்கள் பணியை தவறவிட்டதை அந்த குறும்படம் ஆதாரத்துடன் நிரூபித்தது. இதனால் போட்டியாளர்கள் இருவரையும் ரவுண்டு கட்டி தாக்கினர். கேள்விகள் கேட்ட ஆதிரைக்கும் கம்ருதீனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறை நிலவிய நிலையிலும், திவாகர் நீச்சல் குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி விதிமுறையை மீறினார். இதை கம்ருதீன் ஆட்சேபித்தபோது, ‘பாடி ஷேமிங்’ குற்றச்சாட்டை முன்வைத்து திவாகர் அவரிடம் பேச மறுத்தார். அதன்பின்னர் திவாகர் ‘வாட்டர் மெலன் அகாடமி’ என்ற பெயரில் நடிப்பு பயிற்சி அளித்து, சிறப்பான நடிப்பிற்காக விக்ரமிற்கு ‘நடிப்பு அரக்கன்’ பட்டத்தை வழங்கினார்.

அடுத்ததாக வீட்டு தலைவருக்கான டாஸ்க்கின் இரண்டாம் பகுதியாக, அழுக்கு படிந்த ஜீன்ஸ் பேண்ட்டை சுத்தமாக துவைக்கும் போட்டி கொடுக்கப்பட்டது. பஸ்ஸர் அடித்ததும் தண்ணீர் பிடிப்பதற்காக மக்கள் ஓடியதில், கெமிக்கும் பார்வதியும் பக்கெட்டை பிடுங்க முயன்று ஆக்ரோஷமாக மோதினர். இறுதியாக இந்த டாஸ்க்கில் ஒருவழியாக கெமி வென்றார். ஜீன்ஸ் பேண்ட்டை கொண்டுவராமல் வெறும் பக்கெட்டை மட்டும் எடுத்து வந்ததால் தோல்வியடைந்த பார்வதி, ஆவேசத்துடன் தனியாக சென்று கண்ணீர் விட்டார். முடிவில், துஷார், பிரவீன்ராஜ், ஆதிரை ஆகிய மூவரும் டாப் 3-ல் வந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்கள்.

நேற்றைய இரண்டாம் பாதி அழுகையுடன் தொடங்கியது. பிரவீன் காந்தி தனது கதையை தத்துவத்துடன் தொடங்க, பார்வதி குறுக்கிட்டு ஆட்சேபித்தார். காந்தி, தான் நடிகை திரிஷாவை அறிமுகம் செய்ததாக சொல்லி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதாவது பிரசாந்த் – சிம்ரன் நடித்த ‘ஜோடி’ திரைப்படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரு சின்ன கேரக்டரில் த்ரிஷா அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய எபிசோடின் கடைசியாக நண்பர்கள் கேலி செய்ததால் நந்தினி மனமுடைந்து பாத்ரூமில் சென்று அழுதார். கனி, அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினார். இந்த சம்பவங்களுடன் நான்காம் நாள் நிகழ்ச்சி பரபரப்பாக முடிவுக்கு வந்தது.