Bigg Boss Tamil Season 9 Episode 3 Day 2: பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ன் மூன்றாம் நாள், ஆரம்ப கால மோதல்களால் நிரம்பி இருந்தது. அன்றைய நாளின் முதல் டாஸ்க்கே வீட்டின் நிஜ முகங்களை காட்டத் தொடங்கியது. ஒவ்வொரு போட்டியாளரும் ‘முதல் வாரத்தில் எலிமினேட் ஆகக்கூடியவர் யார்?’, ‘யார் வின்னர் ஆவார்கள்?’ என்று வெளிப்படையாக பேச வேண்டிய டாஸ்க், பல சுவாரஸ்யமான மற்றும் சில்லறைத்தனமான கருத்து மோதல்களுக்கு வழிவகுத்தது.
டாஸ்க்கில் மிகவும் நேர்மையான மற்றும் சரியான பாயிண்ட்டுகளை முன்வைத்தவர்கள் சபரி மற்றும் ஆதிரை என தோன்றியது. இவர்கள் இருவரும் விஜே பார்வதியை தான் எலிமினேஷன் லிஸ்ட்டில் வைத்தனர்.
ஆதிரை மிகத் தெளிவாக, “பார்வதி அவர்கள் செய்யும் ஆக்ஷன்ஸ், அவரது பிஹேவியர் மிகவும் மோசமாக இருக்கிறது. அவர் சொல்வதுதான் சரியென காமித்துக்கொள்கிறார். இதனால் அவர் வெளியேற வாய்ப்புள்ளது” என்று கூறினார். ஆதிரையின் இந்த தெளிவான பார்வை பாராட்டுக்குரியது.
சபரி, பார்வதியின் ஆதிக்கம் செலுத்தும் அணுகுமுறையையும், ஆரம்பத்தில் இருந்தே அவர் நடந்து கொள்ளும் விதமும் சரியாக இல்லை என கூறி, அவரை நாமினேட் செய்தார்.
கானா வினோத், சபரியை விமர்சித்து, “சபரி மிகவும் ஓவர் ஆக்டிங் செய்கிறார். அவர் பேசுவது, உணர்ச்சிவசப்படுவது எல்லாம் நடிப்பாக தெரிகிறது. இதனால் அவர் எலிமினேட் ஆகலாம்” என்று கூறியது கேம் பிளானின் ஒரு பகுதியாக பார்க்கப்பட்டாலும், சபரியுடன் நெருங்கி பழகியவர்களுக்கு அது அவரது இயல்பான குணம் என தெரியும்.
கலையரசன் தான் வாங்கிய விருதுகளை பற்றியும், அகோரியாக இருப்பதால் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் இருக்கும் சமூக சிக்கல்களைப் பற்றியும் பேசியது, சிம்பதி நாடகமா என்று கேள்வி எழுப்பியது. “அவார்டுகளை அடுக்கி காட்டுவதற்காக பிக்பாஸ் வரவில்லை” என்று அவர் பெருமை பேசினாலும், தான் ஏன் பிக்பாஸ் வீட்டுக்கு வர நேர்ந்தது என்ற உண்மை நிலையை அவர் சொன்னது நியாயமாக இருந்தது.
பார்வதி, கலையரசனின் இந்த கதையைக் கேட்ட பிறகு, அவரை வின்னர் என்று சொன்னது, அவர் ஜிஞ்சா போடுவதற்காக இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
வீட்டில் மிகவும் எரிச்சலூட்டும் ஒரு விஷயம் என்றால் அது கம்ருதின் மற்றும் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் இடையே நடக்கும் சில்லறை சண்டைகள் தான்.
திவாகருடன் சண்டையிடுவதை விடுத்து, தனது தனிப்பட்ட கேம் மற்றும் நோக்கங்களில் கம்ருதின் கவனம் செலுத்த வேண்டும். திவாகர் போன்ற ஒருவரிடம் உட்கார்ந்து ஏட்டிக்கு போட்டியாக பேசுவது, அவரது கேம் தரத்தை குறைப்பதாகவே உள்ளது.
வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் “நான் 60 நாள் இருப்பேன்” என்று வெளிப்படையாக பேசுவதும், சண்டை போடுவதும் வேண்டுமென்றே கான்ட்ரவர்சிக்காக செய்கிறார் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இவர் பார்வதிக்கு ஆதரவாக நிற்பதும், மற்றவர்களிடம் சண்டையிடுவதும் கவன ஈர்ப்பு நாடகமாகவே தெரிகிறது. இவர்களது சண்டைகள் சுவாரஸ்யத்தை விட, சலிப்பையே தருகின்றன.
பார்வதி, விக்ரம் அவர்களிடம், “கேமரா மறைக்கும்படி நிற்கிறீர்கள், கொஞ்சம் தள்ளி நில்லுங்கள், இங்கு நிறைய கேமரா இருக்கிறது” என்று கூறியது, முற்றிலும் பாடி ஷேமிங் செய்யும் ஒரு செயல். தான் கேமரா வெளிச்சத்தில் இருக்க வேண்டுமென்பதற்காக, விக்ரமின் உடல் அமைப்பை குத்திக்காட்டி பேசியது ஏற்றுக்கொள்ள முடியாதது.
சண்டையின் முடிவில் சுபிக்ஷாவை சமாதானம் செய்வதாக கூறிவிட்டு, திவாகர் மற்றும் கலையரசனுடன் சேர்ந்து சுபிக்ஷாவை பற்றிக் கிண்டல் அடித்தது அவர் கொண்ட பெண்ணியம் பேசும் கொள்கைகளுக்கும் நேர் எதிரானது. இந்த செயல் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது.
விஜே பார்வதி தன்னை கான்ட்ரவர்சியான நபர் என்று நிலைநிறுத்திக் கொள்ள நினைத்து, மோசமான பிஹேவியர் மற்றும் அதிகப்படியான நடிப்பைக் காட்டுவது, அவரது கேமிற்கு சரியாக அமைய வாய்ப்பில்லை.
மொத்தத்தில் மூன்றாவது நாளில் சண்டைகள் மற்றும் நாடகங்களின் மூலம் போட்டியாளர்களின் தெளிவான தரப்பை காட்டியுள்ளது. ஆதிரை, ரம்யா, சபரி போன்றவர்கள் நல்ல பார்வை கொண்டவர்களாகவும், பார்வதி, திவாகர், வினோத் போன்றவர்கள் சில்லறைத்தனமான நாடகங்களை நிகழ்த்துபவர்களாகவும் தெரிகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
