பிக் பாஸ் வீட்டில் கவனிக்கப்பட்ட ஒரு முக்கிய அம்சம், பார்வதியின் நிலைப்பாடுகள் மாறக்கூடியது என்பதே. அவர் முதல் நாளில் வீட்டில் செல்வாக்கு மிக்கவர்களாக கருதப்படும் போட்டியாளர்களுடன் நெருக்கம் பாராட்டுகிறார்:
முதல் நாளில், நன்கு பிரபலமான பிரவீண் காந்தி மற்றும் திவாகர் ஆகிய இருவரை கொண்டும் தனது ஆட்டத்தை தொடங்கினார். ஆனால் பிரவீண் காந்தி அமைதியாக இருக்கத் தொடங்கியதும், பார்வதியின் முழு ஆதரவும் அதிகமாக ஆதிக்கம் செலுத்தும் போட்டியாளரான திவாகர் பக்கம் திரும்பியது.
எப்போதும் சண்டை நடக்கும் அல்லது ஆதிக்கம் செலுத்தும் போட்டியாளருடன் நட்பு கொள்வது மூலம், தானும் எப்போதும் கேமராவில் தெரிந்து கொண்டே இருக்கலாம் என்ற ‘லைம்லைட்’ உத்தியை பார்வதி பயன்படுத்துவதாக தெரிகிறது. இதற்கு முன்னர் நடந்த சீசன்களில் சில போட்டியாளர்கள் இதே உத்தியை கையாண்டு ஒன்றுமே செய்யாமல் கிட்ட்த்தட்ட 90 நாட்கள் வரை தாக்கு பிடித்தனர்,.
பார்வதி, திவாகரை ஆரம்பத்தில் கிண்டல் செய்தாலும் , தற்போது அவருடன் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார். “பார்வதிதான் தன்னைப் புரிந்து கொள்கிறார்” என்று திவாகரே கேமரா முன் பேசிய்து தான் இதற்கு சான்று. அதாவது, திவாகரின் பிரபலம் அது நெகட்டிவ்வாக இருந்தாலும் பார்வதிக்கு தேவைப்படுகிறது என தெரிகிறது.
பார்வதி மற்றும் கனிக்கு இடையே நடந்த ‘ஹைஜீன்’ குறித்த விவாதம், பார்வதியின் மற்றுமொரு உத்தியை வெளிப்படுத்தியது சமையல் செய்யும் கனி, ‘குடிப்பதற்காக வைத்திருந்த தண்ணீரை’ அவசரத்தில் சமைக்க பயன்படுத்தியபோது, கனி அதை ‘ஹைஜீன்’ காரணங்களுக்காகவே விவாதித்தார். ஆனால், பார்வதி இதை திரித்து கனியின் பிம்பத்தை உடைக்க முயன்றார். எப்படி ஒரு பிரபலத்துடன் நட்பாக இருப்பது முக்கியமோ, அதேபோல் இன்னொரு பிரபலத்துடன் மோதும் போக்கையும் கடைபிடிக்க வேண்டும் என்பது பாருவின் ஐடியாவாக இருக்கலாம்.
இந்த ஹைஜீன் விவாதம் தவிர, பார்வதிக்கு கனி மீது ஏற்கனவே ஒருவித வருத்தம் இருப்பதாக கூறப்படுகிறது. ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் கனியின் சகோதரி வெற்றி பெற்றதால் ஏற்பட்ட பழைய கோபம் மற்றும் பொறாமையாகவும் இருக்கலாம். இதனால் தற்போது ‘காரக்குழம்பு கனி’ என்ற பெயரில் வந்துள்ள கனி மீது வெறுப்பை காட்டுவது போல் தெரிகிறது.
இளம் போட்டியாளரான சுபிக்ஷா, தன்னை வேலை வாங்குவது பார்வதிக்கு விருப்பமில்லை. அப்பாவுடன் விளாக் செய்து பிரபலம் அடைந்த சுபிக்ஷா, தன்னை போன்ற கஷ்டப்பட்டு முன்னேறிய ஒருவருக்கு எதிராக நிற்பதை அவர் ஏற்க தயாராக இல்லை. சுபிக்ஷா ஒருமுறை ‘உங்களுக்கு கண் தெரியலையா?’ என்று கேள்வி எழுப்பியபோது, “நீ என்னை கண்ணாடி போட சொல்லி கேள்வி கேட்கிறாயா?” என்று பார்வதி அவரை அச்சுறுத்தும் தொனியில் பேசியதும் ஒரு ஆட்டிடியூடு தான்.
திவாகர் சண்டையிடும்போது, பார்வதி நியாயம் பேசுவார் என்று ரம்யா எதிர்பார்த்த நிலையில், அவர் திவாகருக்கு சாதகமாகவே இருந்ததால், “தயவுசெய்து சப்போர்ட் பண்ணாமல் விலகி நில்லுங்கள்மா” என்று ரம்யா கேட்டுக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.
மொத்தத்தில், பிக் பாஸ் வீட்டில் கேமராவுக்கு ஏற்றபடி ரியாக்ஷன் கொடுப்பதிலும், எளிதில் தாக்க முடியாத போட்டியாளர்களை ‘டபுள் கேம்’ மூலம் கையாள்வதிலும் பார்வதி தீவிரமாக செயல்படுகிறார். இது, சண்டை போட தெரியாமல், சண்டையிடுபவருடன் கூட இருந்து 50 நாட்களை கடக்க அவர் வகுத்துள்ள உத்தி என தெரிகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
