Biggboss Tamil season 9: டேய் திவாகர்.. நீ அடி வாங்காம போக மாட்ட.. எகிறிய ரம்யா ஜோ.. ஆவேசத்துடன் அடிக்க போன FJ.. இரண்டே நாளில் எல்லோர்கிட்டயும் சண்டை போட்ட வாட்டர்மெலன் ஸ்டார்!

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் புதிய சீசன் தொடங்கிய முதல் நாளே சண்டை, சச்சரவுகளுடன் பரபரப்பு தொடங்கிவிட்ட நிலையில், ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் போட்டியாளர் திவாகர், கிட்டத்தட்ட அனைத்து சக போட்டியாளர்களுடனும்…

diwagar

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் புதிய சீசன் தொடங்கிய முதல் நாளே சண்டை, சச்சரவுகளுடன் பரபரப்பு தொடங்கிவிட்ட நிலையில், ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் போட்டியாளர் திவாகர், கிட்டத்தட்ட அனைத்து சக போட்டியாளர்களுடனும் வம்பு இழுத்து சண்டை போட்டது பேசுபொருளாகி உள்ளது. சக போட்டியாளர்களை கொஞ்சமும் மதிக்காமல், ‘நான்தான் புத்திசாலி, நான்தான் திறமைசாலி, நான்தான் அதிகம் படித்தவன்’ என்று அவர் வீம்புடன் பேசும் பாணி, பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் இரண்டு நாட்களிலேயே, திவாகர் தான் மட்டுமே புத்திசாலி என்பது போன்ற தோரணையில் பேசிக்கொண்டிருந்தார். இன்று, “நான் தான் இந்த வீட்டிலேயே அதிகமாக படித்தவன்” என்று அவர் தற்பெருமை பேசியது மேலும் ஒரு கடுமையான சண்டைக்கு வழிவகுத்தது.

அப்போது, போட்டியாளர் ரம்யா ஜோ, திவாகரின் போக்கை குறித்துக் கேள்வி எழுப்பினார். “திவாகர், தனது விஷயத்தில் யாராக இருந்தாலும் எதுவும் சொல்லக் கூடாது என்று சொல்கிறார். ஆனால் இவர் மட்டும் மற்ற எல்லோர் விஷயத்திலும் மூக்கை நுழைத்து, இது சரி, அது தப்பு என்று சொல்வாரா? இது என்ன நியாயம்?” என்று ரம்யா ஜோ கேள்வியெழுப்பினார்.

ரம்யாவின் கேள்வியை கேட்டதும், திவாகர் உடனடியாக அவரை நோக்கி, “நீ படித்த பெண் தானே? நீ என்ன படித்திருக்கிறாய் என்று கேட்க?” என்று சீண்டும் தொனியில் கேள்வியெழுப்பினார். நான் என்ன படித்திருக்கிறேன் என்று கேட்க நீ யார்? உனக்கு என்ன கேட்க உரிமை இருக்கிறது?” என்று கோபத்துடன் எகிறிக்கொண்டு சண்டைக்கு வந்தார் ரம்யா ஜோ.

அருகில் இருந்த மற்றொரு போட்டியாளரான FJ என்பவரும் இந்த விவாதத்தில் கலந்துகொண்டார். திவாகர் படிப்பு குறித்து பேசியதைக் கேட்டு ஆவேசமடைந்த FJ, “நீ படிப்பை பத்தி பேசி கொண்டிருக்கிறாயா? நான் என்ன படித்திருக்கிறேன் தெரியுமா உனக்கு?” என்று சத்தமிட்டபடி கிட்டத்தட்ட திவாகரை அடிக்கப் போய்விட்டார். அங்கிருந்த சக போட்டியாளர்கள் தலையிட்டு இருவரையும் விலக்கினர். இது வீட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து, சக போட்டியாளர்களை கொஞ்சமும் மதிக்காமல், தான் மட்டுமே புத்திசாலி என்ற ரீதியில் பேசிக்கொண்டிருக்கும் திவாகர் போன்ற ஒரு நபரை எப்படி போட்டியாளராக பிக்பாஸ் ஆடிஷன் குழு தேர்வு செய்தது என்று சமூக வலைதளங்களில் பிக் பாஸ் குழுவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று இருந்த ஒரு மரியாதை போய்விட்டது. இந்த சீசனுக்கு திறமையானவர்களை தேர்வு செய்யாமல், இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர்கள், யூடியூபர்கள் மற்றும் கழிசடைகளை எல்லாம் கொண்டு வந்து போட்டியாளர்களாக மாற்றியிருக்கிறார்கள்,” என்று பலரும் விமர்சித்துள்ளனர். பிக் பாஸ் வரலாற்றில் இந்த சீசன்தான் மிகவும் மோசமான சீசனாக இருக்கும் என்று இரண்டாவது நாளே பார்வையாளர்கள் கணித்துள்ளனர்.

பிக் பாஸ் என்பது கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற நிலையில், தற்போது அது எரிச்சலூட்டும் நிகழ்ச்சியாக மாறி வருவது ரசிகர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் குழுவினர் உடனடியாக தலையிட்டு, நிகழ்ச்சியின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.