வரலாற்றில் ஒரு திருப்புமுனை.. இந்திய ரூபாயில் கடன் பத்திரம் வெளியிடும் பிரிக்ஸ்.. இனி டாலருக்கு அவசியமே இல்லை.. டிரம்ப் மிரட்டல் இனி செல்லாது.. தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட அமெரிக்காவின் வியூகம்.. இனி இந்தியா தான் உலக பொருளாதாரத்தின் மையப்புள்ளி..!

கடந்த சில நாட்களாக ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக, ‘பிரிக்ஸ் வங்கி இந்தியாவில் ஏதோ ஒரு கடன் பத்திரத்தை வெளியிடுகிறது’ என்ற செய்தி உலா வருகிறது. ஆனால், உண்மை அதுவல்ல; முக்கிய ஊடகங்கள் இதை தவறாக…

indian rupee

கடந்த சில நாட்களாக ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக, ‘பிரிக்ஸ் வங்கி இந்தியாவில் ஏதோ ஒரு கடன் பத்திரத்தை வெளியிடுகிறது’ என்ற செய்தி உலா வருகிறது. ஆனால், உண்மை அதுவல்ல; முக்கிய ஊடகங்கள் இதை தவறாக புரிந்துகொண்டு செய்திகளை வெளியிடுகின்றன என்றும், இது வெறும் கடன் பத்திரம் மட்டும் அல்ல. இது ஒரு ‘சுதந்திரப் பிரகடனம்’ என்றும் கூறப்பட்டு வருகிறது..

திமிர் பிடித்த பொருளாதார அராஜகம், அமைதியான, கண்ணியமான மற்றும் மிக திறமையான பதிலடியை சந்தித்த கதை இது. மார-லா கோவில் (Mara Lago) அமர்ந்திருக்கும் டொனால்ட் டிரம்ப் இதை பார்த்துவிட்டு, அமைதியாக இருக்க மாட்டார்; அவர் மனதளவில் மிகவும் கொந்தளித்துக் கொண்டிருப்பார். அதற்கு அவருக்கு எல்லா காரணங்களும் இருக்கின்றன.

இந்தியா மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் புத்திசாலித்தனமான நகர்வை புரிந்துகொள்ள, அதற்கு தூண்டுதலாக இருந்த அமெரிக்காவின் தாக்குதல் குறித்து முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இது வெறும் வர்த்தக பிரச்சனை அல்ல. இது டிரம்ப்பின் வெள்ளை மாளிகையால் உருவாக்கப்பட்ட பொருளாதார மிரட்டல் பிரச்சாரம்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பொருட்களுக்கான வரிகளை அதிகரித்தார். இந்திய ஜவுளிகள், நகைகள், காலணிகள் மற்றும் இரசாயனங்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு 50% வரி விதித்தார். இந்தியா செய்த குற்றம் என்ன? அது ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க துணிந்தது; அதன் 140 கோடி மக்களின் எரிசக்தி பாதுகாப்பை முதலில் கருதியது.

மேலும், அமெரிக்காவிலுள்ள 5.4 மில்லியன் இந்தியர்களிடமிருந்து ஆண்டுக்கு சுமார் $33 பில்லியன் தொகையாக இந்தியாவுக்கு வரும் பணம் குறைக்கும் நோக்குடன், H-1B விசா கட்டணங்களையும் டிரம்ப் உயர்த்தினார்.

அமெரிக்காவின் எண்ணம் மிக எளிமையானது, நான் உன்னைத் தாக்கினால், நீ பணிந்து போவாய், இந்தியா அழுத்தத்திற்கு அடிபணியும், ரூபாயின் மதிப்பு சரியும், மோடி நிவாரணத்திற்காக அமெரிக்கா வந்து கெஞ்சுவார் என்பதே டிரம்ப்பின் கணக்கு. இது பணத்தை பற்றியது மட்டுமல்ல, உலகம் காணும் இந்தியாவின் அவமானத்தை பற்றியது. அமெரிக்க டாலர் தான் ராஜா, அமெரிக்காவின் சந்தையே ஆதிக்கம் செலுத்தும் என்ற ஆணவமே வரிவிதிப்பிற்கு காரணம்

ஆனால் இந்த ஆணவத்திற்கு இந்தியா கொடுத்த பதிலடி, கோபமான ட்வீட்களோ, வெற்று சத்தமோ அல்ல. அது மிகவும் ஆழமானது, சக்தி வாய்ந்தது. அந்த சக்தி தான் ‘சுதேசி’

‘சுதேசி’ என்றால் தற்சார்பு, இதுதான் காந்திக்கு உந்துதலாக இருந்து, இந்தியாவை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இருந்து விடுவித்தது. அதே உணர்வுதான் இப்போது அமெரிக்க நிதி சாம்ராஜ்யத்தை எதிர்த்து பயன்படுத்தப்படுகிறது.

இந்தியா என்ன செய்தது? பிரிக்ஸ் கூட்டமைப்பின் புதிய மேம்பாட்டு வங்கி களத்தில் இறங்கியது. பிரிக்ஸ் நாடுகள் உருவாக்கும் வங்கியாம NDB (New Development Bank) சுமார் $500 மில்லியன் மதிப்புள்ள கடன் பத்திரங்களை வெளியிட போகிறது. ஆனால், அது அமெரிக்க டாலரில் அல்ல, இந்திய ரூபாயில்!

டிரம்ப் டாலரை கொண்டு ரூபாயைப் பலவீனப்படுத்த முயன்றார். அதற்கு இந்தியா, ரூபாயை வெறுமனே பாதுகாக்காமல், சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து ரூபாய்க்கான புதிய தேவையை உருவாக்கியதோடு, பலவீனத்தை தடுக்கும் கருவியாக மாற்றியது.

இதன் மூலம் இந்தியா தனது நிறுவனங்களிடம், “நீங்கள் இனி வால் ஸ்ட்ரீட்டிற்கு சென்று டாலரில் கடன் வாங்க தேவையில்லை. அமெரிக்க அதிபரின் ட்வீட்டிற்கோ, மத்திய வங்கியின் நடவடிக்கைகளுக்கோ பயப்பட வேண்டாம். நமது சாலைகள், நமது சூரிய பண்ணைகள், நமது டிஜிட்டல் வலைப்பின்னலை நமது சொந்த பணத்தைக் கொண்டு, நமது சொந்த விதிமுறைகளின் கீழ் உருவாக்குவோம்” என்று சொல்கிறது. இதுதான் சுதேசி-யின் நவீன வடிவம்.

இந்த நகர்வு வெறும் $500 மில்லியனை பற்றியது அல்ல. இது மூலதனத்திற்கான புதிய பாதையை உருவாக்குவதை பற்றியது. இது வால் ஸ்ட்ரீட்டின் சுங்கச்சாவடிகள் அனைத்தையும் தவிர்த்து, ஒரு புதிய முதலீட்டு சேனலை உருவாக்குவதைப் பற்றியது.

இந்த சுதேசி மனப்பான்மை வெறும் இந்தியாவை தாண்டி, இப்போது ஒரு உலகளாவிய இறையாண்மை குறித்த விஷயமாக மாறியுள்ளது. அமெரிக்காவின் நிதி முறையை வெளிநாட்டு கொள்கையின் ஆயுதமாக பயன்படுத்துவதற்கு உலகம் சோர்வடைந்துவிட்டது.

JP மோர்கன் போன்ற அமெரிக்க நிதி நிறுவனங்களின் அறிக்கைகளே, மத்திய வங்கிகள் டாலர் பத்திரங்களை குவித்து, தங்கத்தை வாங்குவதை பற்றி எச்சரிக்கின்றன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு போன்ற பிற கூட்டமைப்புகள், பரஸ்பர வர்த்தகத்தில் டாலரை கைவிட ஒரு வரைபடத்தை உருவாக்குகின்றன. பெட்ரோ-டாலர் அமைப்பின் ஆணிவேராக இருந்த சவுதி அரேபியா கூட, சீனாவுக்கு எண்ணெய் விற்பதை யுவான் நாணயத்தில் பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் இந்த நகர்வு, “எங்களில் ஒருவரை நீங்கள் தண்டித்தால், நீங்கள் எங்கள் அனைவரையும் எதிர்கொள்ள வேண்டும்” என்ற தெளிவான செய்தியை அமெரிக்காவிற்கு அனுப்புகிறது.

இந்த சூழ்நிலைக்கு டிரம்ப் எப்படி எதிர்வினையாற்றுகிறார்? அவர் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் கோபத்துடன் மிரட்டுகிறார்: “இந்த நாடுகள் புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கவோ அல்லது அமெரிக்க டாலருக்கு பதிலாக வேறு எந்த நாணயத்தையும் ஆதரிக்கவோ கூடாது என்று நாங்கள் கட்டாயப்படுத்துவோம். இல்லையேல் அவர்கள் 100% வரிகளை எதிர்கொள்ள நேரிடும்.” இந்த ‘கட்டாயப்படுத்துவோம்’ என்ற வார்த்தை, அதிகாரத்தை இழந்த ஒரு தலைவரின் மொழியாக பார்க்கப்படுகிறது.

டாலரை பயன்படுத்த வேண்டும் என பிற நாடுகளை அமெரிக்கா கட்டாயப்படுத்தினால், அதுவே தேசிய நாணயங்களுக்கு மாறுவதற்கான போக்கை மேலும் வலுப்படுத்தும். டிரம்ப் தனது சொந்த பெருமையின் மூலம், தான் பாதுகாக்க முயலும் அமைப்பின் வீழ்ச்சியை தாமே துரிதப்படுத்துகிறார். இது அமெரிக்காவே செய்யும் மிகப்பெரிய வியூக தவறாகும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இந்த ரூபாய் கடன் பத்திரங்களின் வெற்றி, மற்ற நாடுகளுக்கும், மேம்பாட்டு வங்கிகளுக்கும் டாலர் அல்லாத சொத்துக்களில் முதலீடு செய்ய துணிச்சலை அளிக்கும். இதுதான் சுதேசி-யின் பாதை. சில ஆண்டுகளுக்கு பிறகு, கென்யாவில் ஒரு சிறு தொழில்முனைவோர் கடன் வாங்க வேண்டுமானால், IMF-இன் டாலர் கடன்களை நாடாமல், மும்பையில் இருந்து வெளியிடப்படும் ரூபாய் பசுமை கடன் பத்திரங்களை நம்பி, மூலதனத்தை பெற முடியும். மூலதனம் உலகளாவிய தெற்கிலிருந்து பாயும்.

பிரிக்ஸ் நாடுகள் உள்பட மற்ற நாடுகளுக்கு இது வெறும் நிதி பற்றியது அல்ல. இது தங்கள் தேசிய விதியை மீண்டும் கையில் எடுப்பது பற்றியது. இது பொருளாதார சுதந்திரத்திற்கான போராட்டம்.

ஆம், நாம் இங்கு அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆணவ செயலையும், அதற்கு பதிலாக இந்தியா மற்றும் அதன் பிரிக்ஸ் கூட்டாளிகளிடமிருந்து வரும் அற்புதமான, கண்ணியமான மற்றும் மூலோபாய ரீதியாகச் சக்தி வாய்ந்த பதிலடியையும் பார்த்திருக்கிறோம். இது வரலாற்றில் ஒரு திருப்புமுனை. புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது; அதன் தலைப்பு ‘தற்சார்பு’ என்பதே.