கெடுவான் கேடு நினைப்பான்.. இந்தியாவுக்கு வரி போட்டு முடக்க நினைத்த அமெரிக்க அரசாங்கம் இப்போது முடக்கம்.. அமெரிக்காவில் அதிகார திமிர்.. இந்தியாவில் ஜனநாயகரீதியான நல்லிணக்கம்.. இதுதான் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வித்தியாசம்..

உலக அரங்கில் தற்போது முற்றிலும் மாறுபட்ட இரண்டு காட்சிகள் அரங்கேறி வருகின்றன. ஒருபுறம், அரசியல் பூசலால் தனது பயணத்தை நிறுத்தி வைத்திருக்கும் ஒரு நாடு, மறுபுறம், முழு வேகத்தில் முன்னேறி கொண்டிருப்பதாக அறிவிக்கும் தேசம்.…

modi trump 1

உலக அரங்கில் தற்போது முற்றிலும் மாறுபட்ட இரண்டு காட்சிகள் அரங்கேறி வருகின்றன. ஒருபுறம், அரசியல் பூசலால் தனது பயணத்தை நிறுத்தி வைத்திருக்கும் ஒரு நாடு, மறுபுறம், முழு வேகத்தில் முன்னேறி கொண்டிருப்பதாக அறிவிக்கும் தேசம். இதுதான் அமெரிக்க அரசாங்க முடக்கம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் தன்னம்பிக்கை நிறைந்த வளர்ச்சி கூற்றின் கதை.

அக்டோபர் 1, அன்று, அமெரிக்க கூட்டாட்சி அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக முடக்கத்தை அடைந்தது. அரசாங்கத்தை தற்காலிகமாக இயக்க அனுமதிக்கும் இடைக்கால நிதி மசோதா செனட்டில் நிராகரிக்கப்பட்டதால் அமெரிக்காவே ஸ்தம்பித்தது. குடியரசுக் கட்சியின் மசோதா மற்றும் சுகாதாரம், மருத்துவ உதவி திட்டங்களை உள்ளடக்கிய ஜனநாயக கட்சியின் மசோதா என இரண்டுமே தோல்வியடைந்தன.

ஜனநாயகக் கட்சியினரே முடக்கத்திற்கு காரணம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டினார். முடக்கம் ஏற்பட்டால், சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்காக சுகாதார பலன்களை ஜனநாயக கட்சியினர் கோருவதால்தான் பணிநீக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். “நாங்கள் நிறைய பேரை பணிநீக்கம் செய்ய நேரிடலாம், அதற்கு ஜனநாயக கட்சியினரே காரணம்” என்று டிரம்ப் கூறினார்.

குடியரசு கட்சியினர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நிராகரித்து, கட்சி சார்ந்த மசோதாவை திணித்து, அமெரிக்கர்களின் சுகாதார பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று ஜனநாயக கட்சியினர் பதிலளித்தனர். சுகாதார செலவுகளை குறைக்க வேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த முடக்கத்தால் 7,50,000 கூட்டாட்சி ஊழியர்கள் ஊதியம் இல்லாமல் விடுப்பில் செல்ல வேண்டியுள்ளது. விமான போக்குவரத்து போன்ற முக்கிய பணியாளர்கள் ஊதியம் இல்லாமல் தொடர்ந்து பணிபுரிய வேண்டும். நீண்டகால முடக்கங்கள் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கலாம்; 2018-19 முடக்கத்தால் $3 பில்லியன் GDP இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. பொருளாதார தரவுகள் வெளியாவதில் தாமதம், சந்தையில் நிச்சயமற்ற தன்மை, உலகளாவிய முதலீட்டாளர்கள் மத்தியில் பதற்றம் என இந்த முடக்கத்தின் தாக்கம் அமெரிக்க எல்லைகளைத்தாண்டி எதிரொலிக்கும்.

அமெரிக்காவில் இப்படி ஒரு இக்கட்டான நிலை இருக்கும் நிலையில், இந்தியாவை பொருத்தவரை வளர்ச்சியே செய்தியாக உள்ளது. ரிசர்வ் வங்கி தனது சமீபத்திய நிதி கொள்கை கூட்டத்தில், முக்கிய ரெப்போ வட்டி விகிதத்தை 5.50% என்ற அளவில் நிலையாக வைத்திருப்பதாக அறிவித்தது.

வலுவான உள்நாட்டு தேவை, சாதகமான வரி கொள்கைகள் மற்றும் முதலீடு காரணமாக, இந்தியாவின் GDP வளர்ச்சி கணிப்பை RBI திருத்தியுள்ளது. 2025-26 நிதியாண்டுக்கான GDP வளர்ச்சி விகிதத்தை 6.5% லிருந்து 6.8% ஆக உயர்த்தி மதிப்பிட்டுள்ளது.

உணவுப் பொருட்களின் விலை குறைந்ததாலும், GST விகிதங்கள் சீரமைக்கப்பட்டதாலும், ஒட்டுமொத்த பணவீக்க கண்ணோட்டம் மிகவும் சாதகமாக மாறியுள்ளதாக RBI கூறியுள்ளது. இதன் விளைவாக, சராசரி பணவீக்கக் கணிப்பு 3.7% லிருந்து 2.6% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டொனால்ட் டிரம்ப் இந்தியாவை ‘இறந்துபோன பொருளாதாரம்’ என்று கிண்டல் செய்த நிலையில், சமீபத்திய இந்த எண்கள் இந்தியாவின் அடிப்படைகள் வலுவாக இருப்பதை காட்டுவதோடு, இறந்து போன பொருளாதாரம் அமெரிக்கா தான் என்பதும் தெளிவாகியுள்ளது.

அமெரிக்கா அரசியல் முட்டுக்கட்டையின் விளைவுகளுடன் போராடி கொண்டிருக்கும் வேளையில், இந்தியா ஸ்திரத்தன்மையை திட்டமிட்டுள்ளது. கூட்டாட்சி ஊழியர்கள் விடுப்பில் அனுப்பப்படுவதாலும், முக்கிய பொருளாதாரத் தரவுகள் தாமதமாவதாலும், அமெரிக்காவின் பெடரல் வங்கிக்கு தேவைப்படும் முடிவுகளை எடுக்க தேவையான தகவல்கள் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. இந்த நிச்சயமற்ற தன்மையானது, அங்கு மேலும் வளர்ச்சியை மெதுவாக்கக்கூடும். உலக அரங்கில் ஒரு நாடு பின்னடைவை சந்திக்கும் வேளையில், இன்னொன்று வளர்ச்சி பாதையில் உறுதியாக நிற்பது, இந்த இரண்டு நாடுகளின் நிர்வாக அணுகுமுறையின் மாறுபட்ட நிலையை தெளிவாக காட்டுகிறது.