இந்தியா-பாகிஸ்தான் போட்டி முடிந்து ஒரு நாள் ஆகியும் அடங்காத சர்ச்சைகள்.. இந்தியாவை ஜெயிப்பது போரிலும் நடக்காது.. போட்டியிலும் நடக்காது.. இந்த ஜென்மத்தில் பாகிஸ்தானுக்கு வெற்றி இல்லை.. கோப்பை கிடைக்காவிட்டாலும் கோலோச்சிய இந்திய வீரர்கள்..!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொண்டபோது, அது ஒரு சாதாரண கிரிக்கெட் போட்டியாக மட்டும் இல்லாமல், பெரும் அரசியல் மற்றும் சமூக பரபரப்புகளை உள்ளடக்கியதாக மாறியது. இதில், இந்திய அணி வெற்றி பெற்ற…

india champion

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொண்டபோது, அது ஒரு சாதாரண கிரிக்கெட் போட்டியாக மட்டும் இல்லாமல், பெரும் அரசியல் மற்றும் சமூக பரபரப்புகளை உள்ளடக்கியதாக மாறியது. இதில், இந்திய அணி வெற்றி பெற்ற போதிலும், போட்டிக்கு பிறகான சில சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்திய அணி கோப்பையை வென்ற பிறகும், கோப்பையை ஏற்க மறுத்ததற்கான பின்னணியில் என்ன நடந்தது என்பதை பார்ப்பொம்,.

பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் 26 இந்தியர்களை சுட்டு கொன்ற சில மாதங்களுக்கு பிறகுதான் இந்த ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றது. இதனால், பல இந்தியர்கள் பாகிஸ்தானை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், இது ஒரு சர்வதேச போட்டி என்பதால், பாகிஸ்தானுடன் விளையாடுவதை தவிர்க்க முடியாது என்று பி.சி.சி.ஐ. கூறியது. இந்த நிகழ்வுகள் போட்டிக்கு முன்பே பதற்றமான சூழலை உருவாக்கின. இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் போட்டியில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய ஐந்து முக்கிய தருணங்கள்.

1. கோப்பையை ஏற்க மறுத்த இந்திய அணி

இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு, கோப்பையை வாங்குவதற்காக மேடைக்கு செல்ல மறுத்துவிட்டது. ஏனெனில், கோப்பையை வழங்க வந்தவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரான மோஷென் நக்வி. இந்திய அணி வேறொருவரிடம் கோப்பையை வழங்குமாறு கோரிக்கை விடுத்தது, ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. இதன் காரணமாக, நக்வி கோப்பையுடன் மேடையை விட்டு வெளியேறினார். இது கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் நடந்ததில்லாத ஒரு நிகழ்வாகும்.

2. கைகுலுக்க மறுப்பு மற்றும் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்காதது

இந்தியா-பாகிஸ்தான் மோதிய மூன்று போட்டிகளிலும், இந்திய வீரர்கள் போட்டிக்கு முன்னும் பின்னும் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கவோ அல்லது புகைப்படம் எடுக்கவோ மறுத்தனர். இந்திய அணியின் இந்த “ராஜதந்திர புறக்கணிப்பு” பாகிஸ்தான் நிர்வாகத்திடமிருந்து கடுமையான எதிர்வினைகளை தூண்டியது.

3. பாகிஸ்தான் வீரர்களின் ஆத்திரமூட்டும் சைகைகள்

சூப்பர் ஃபோர் சுற்றின் போது, பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தில் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டனர். ஹாரிஸ் ரவுஃப், ஜேட் ஸதாஃப், ஃபர்ஹான் போன்ற வீரர்கள் இந்திய ரசிகர்களை நோக்கி ‘6-0’ மற்றும் துப்பாக்கி சுடும் சைகைகளை செய்தனர். இது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் இந்திய வீரர்களிடமிருந்து கண்டனத்தை பெற்றது.

4. பும்ராவின் பதிலடி

இந்தியா-பாகிஸ்தான் இறுதிப்போட்டியில், பும்ரா ஒரு விக்கெட்டை எடுத்த பிறகு, துப்பாக்கி சுடும் சைகை மூலம் பதிலடி கொடுத்தார். ரவுஃப் மற்றும் பிற பாகிஸ்தான் வீரர்கள் செய்த துப்பாக்கி சுடும் சைகைகளுக்கு இது ஒரு நேரடி பதிலடியாக கருதப்பட்டது. பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் 26 பேரைச் சுட்டு கொன்ற பின்னணியில், பும்ராவின் இந்த சைகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

5. நடுவரின் சர்ச்சைக்குரிய செயல்பாடு

ஐ.சி.சி. நடுவர் ஆண்டி பைராக்ஃப்ட், டாஸின் போது கைகுலுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பைராக்ஃப்டின் நடவடிக்கையை கடுமையாக எதிர்த்து, அவர் நீக்கப்படாவிட்டால் ஐ.சி.சி.யின் அடுத்த போட்டியை புறக்கணிப்பதாகவும் மிரட்டியது.

மேற்கண்ட ஐந்து சர்ச்சைகள் இருந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி இந்தப் போட்டியை “ஆபரேஷன் சிந்துர்” என்று குறிப்பிட்டு, இந்திய அணியை வாழ்த்தினார். இது பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கும்.

மொத்தத்தில் போராக இருந்தாலும் சரி, போட்டியாக இருந்தாலும் சரி இந்தியாவை வீழ்த்துவது என்பது பாகிஸ்தானுக்கு பகல்கனவு தான் என்பது மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் தோல்விக்கு பின் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தினர். ஒரு ரசிகர் கோபத்துடன், “பாகிஸ்தான் ஒட்டுமொத்தமாக நினைத்தாலும், இந்தியாவை வெல்ல முடியாது… இந்தியா எங்கள் அப்பாவாக இருந்தார்கள், அப்பாவாகவே இருக்கிறார்கள், அப்பாவாகவே இருப்பார்கள்” என்று ஆவேசமாக கூறினார். “எங்கள் தலைமுறையால் இந்தியாவை தோற்கடிக்க முடியாது. அவர்களின் கால் செருப்புக்கு கூட நாங்கள் சமமானவர்கள் இல்லை. எங்களுடன் கைகுலுக்காமல் இருந்ததுதான் அவர்கள் செய்த சரியான விஷயம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் யூடியூபர் உமர் அஃப்ஸால், மைதானத்தில் செய்த ஆவேசமான ‘விமானம்’ சைகைகளுக்காக ஹாரிஸ் ரவுஃப்பை கடுமையாக விமர்சித்தார். “முதல் நாளில் இருந்தே ஹாரிஸ் ரவுஃப் இந்தியாவை சீண்டிவிட்டார்” என்று அவர் சஞ்சு சாம்சனை அவுட் செய்த பிறகு ரவுஃப் செய்த ‘ஃபைட்டர் ஜெட்’ சைகையை குறிப்பிட்டு கூறினார்.

இன்னொரு ரசிகர் பாகிஸ்தான் அணி இந்தியாவை எதிர்கொள்ளும்போது எப்போதும் பயத்துடன் இருப்பதாகவும், இந்தியாவுடன் விளையாடும்போது எப்போதும் அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள் என்றும், அவர்களால் அந்த அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லை என்றும் கூறினார்.ஆனால் அதற்கு மாறாக, இந்திய அணி அமைதியாகவும், நம்பிக்கையுடனும் உள்ளது” என்றும் ஒரு ரசிகர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனெரியா, சமூக வலைத்தளமான X-ல் ஒரு கூண்டில் அடைக்கப்பட்ட டிவியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். பாகிஸ்தான் ரசிகர்கள் தங்கள் அணி இந்தியாவிடம் தோல்வியுற்றால் டிவியை உடைக்கும் நீண்ட நாள் பாரம்பரியத்தை கிண்டல் செய்யும் வகையில் இந்தப் புகைப்படம் அமைந்திருந்தது.