நேட்டோ நாடுகள் மீது குண்டு வீசியதா ரஷ்யா? உக்ரைன் மீதும் மிருகத்தனமான தாக்குதல்.. ரஷ்யாவை எப்படி கட்டுப்படுத்துவது? தெரியாமல் முழிக்கும் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய நாடுகள்.. இந்தியா, சீனா ஆதரவால் விஸ்வரூபம் எடுக்கும் ரஷ்யா.. இனி என்ன நடக்கும்?

உக்ரைன் மீதான தனது தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில், போலந்தில் உள்ள நேட்டோ தூதரகம் மீது குண்டுவீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம், நேட்டோ நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்ய வெளியுறவு…

russia vs nato

உக்ரைன் மீதான தனது தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில், போலந்தில் உள்ள நேட்டோ தூதரகம் மீது குண்டுவீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம், நேட்டோ நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ், ரஷ்யாவிற்கு எதிராக படைகளை பயன்படுத்துவது குறித்து அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும், ரஷ்யா நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை தாக்க திட்டமிடுவதாக குற்றம் சாட்டப்படுவதாகவும் தெரிவித்தார். இருப்பினும், ரஷ்ய ஜனாதிபதி புடின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். லாவ்ரோவ், “ரஷ்யாவிற்கு அத்தகைய நோக்கங்கள் ஒருபோதும் இருந்ததில்லை, இல்லை. இருப்பினும், எங்கள் நாட்டிற்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பும் ஒரு தீர்க்கமான பதிலடியை பெறும்” என்று எச்சரித்தார்.

இந்த நிலையில் தான் திடீரென ரஷ்யா, போலந்தின் தூதரகம் குண்டுவீசியதாக நேட்டோ உறுப்பினர் நாடான போலந்து குற்றம் சாட்டியது. ‘ஒரு ஏவுகணை அல்லது சிறிய ரக குண்டின் பாகம் தூதரகத்தின் கூரையில் விழுந்ததாகவும், சேதம் பெரிய அளவில் இல்லை என்றும், எந்த உயிர்ச்சேதமும் பதிவாகவில்லை என்றும் போலந்து செய்தி தொடர்பாளர் பாவெல் வ்ரோன்ஸ்கி தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த சம்பவம் நேட்டோ நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உளவுத்துறை தகவல்களின்படி, ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ட்ரோன்களை ஏவ டேங்கர்களை பயன்படுத்துகிறது என்றும், பால்டிக் கடல் மற்றும் பிற கடல்கள் ரஷ்ய கடற்படை செயல்படாத வகையில் மூடப்பட வேண்டும் என்று செலன்ஸ்கி வலியுறுத்தினார். அமெரிக்காவிடமிருந்தும் வலுவான நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுவதாகவும், போரை நிறுத்த ரஷ்யாவை தூண்ட ஜனாதிபதி ட்ரம்புடன் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த மாதத்தில், ரஷ்யாவின் ஆளில்லா விமானங்கள் போலந்து, ருமேனியா மற்றும் டென்மார்க்கின் வான்வெளியை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. செப்டம்பர் 10 அன்று, ருமேனியா, எஸ்டோனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் வான்வெளியில் ரஷ்ய ஜெட் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் அத்துமீறியதாகக் குற்றம் சாட்டின.

செப்டம்பர் 21 அன்று, நேட்டோ ஜெட் விமானங்கள் பால்டிக் கடலில் ரஷ்ய உளவு விமானத்தை இடைமறித்ததாக ஒரு அறிக்கை தெரிவித்தது. அதேபோல் ஜெர்மனி ஒரு ரஷ்ய உளவு விமானத்தை கண்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த தொடர் சம்பவங்கள் ரஷ்யா மற்றும் நேட்டோ நாடுகளிடையே வளர்ந்து வரும் பதற்றத்தையும், உக்ரைன் மீதான போர் ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு எவ்வாறு அச்சுறுத்தலாக உள்ளது என்பதையும் தெளிவாக காட்டுகின்றன.