கலைஞர்களே கவனிங்க..! நவராத்திரி விழாவில் சரஸ்வதி தேவியை வழிபடுவது எப்படி?

நவராத்திரியின் 7ம் நாள் இன்று (29.9.2025) எப்படி வழிபடணும்? தேவியர்களை முப்பெரும் தேவியர்களாக துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என 3 நாமங்களாக வழிபடும் அற்புதமான விழா நவராத்திரி. இந்த விழாவில் முதல் 3 நாள்…

நவராத்திரியின் 7ம் நாள் இன்று (29.9.2025) எப்படி வழிபடணும்? தேவியர்களை முப்பெரும் தேவியர்களாக துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என 3 நாமங்களாக வழிபடும்

அற்புதமான விழா நவராத்திரி. இந்த விழாவில் முதல் 3 நாள் துர்க்காவும், அடுத்த 3 நாள்கள் லட்சுமி தேவியையும் நாம் வழிபடுகிறோம். அந்த வகையில் இன்று நவராத்திரியின் 7ம் நாள் சரஸ்வதி தேவியை வழிபடக்கூடிய முதல் நாள்.

சரஸ்வதி தேவி முழுக்க முழுக்க நமக்கு ஞானத்தை அருளும் தேவி. இந்த ஞானம் பள்ளி செல்லும்போது மட்டும் தேவை கிடையாது. வாழ்நாள் முழுவதும் தேவை. கலைமகளாக விளங்கும் சரஸ்வதி தேவியை நாம் இன்று முதல் 3 நாள்கள் வணங்க வேண்டும். நாம ஒவ்வொருவரும் அவரவர் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து வழிபடுங்கள்.

எனது கலை நன்றாக வர வேண்டும் என அம்பாளிடம் பிரார்த்தனையாக வைத்துக் கொள்ளலாம். இன்று அம்பாளின் பெயர் சாம்பவி. கொண்டக்கடலை சுண்டல், எலுமிச்சை சாதத்தை நைவேத்தியமாக வைக்கலாம். அதே போல நாளை 8ம் நாள். அம்பிகையின் பெயர் நரசிம்ம தாரிணி. பால்சாதம், மொச்சைப் பயறு சுண்டலை நைவேத்தியமாக வைத்து வழிபடலாம்.

நாம படிப்பதற்கு மட்டும்தான் ஞானம் வேணும்னு நினைக்கிறோம். ஆனால் எல்லா விஷயத்துக்கும் அது தேவை. சாதாரணமா நாம தண்ணீர் குடிப்பதற்குக் கூட ஞானம் வேணும். இச்சை, கிரியை, ஞானம் என்ற 3 விஷயங்களும் வேணும். முதலில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். அதன்பிறகு நமக்கு அந்தத் தண்ணீர் கிடைக்க வேண்டும். தண்ணீர் கிடைக்கும் இடத்துக்குத் தேடிச் செல்ல வேண்டும்.

ஒருவர் தண்ணீர் தந்தால் அந்த டம்ப்ளரை வாய் வைத்துக் குடிக்கக்கூடாது. அண்ணாந்து குடிக்க வேண்டும். அதே வேளையில் கண்ணாடி டம்ப்ளரில் குடிப்பது எப்படி என்றும் தெரிய வேண்டும். அதற்கு ஞானம் தேவை. அது போன்று எல்லா விஷயங்களிலும் இந்த ஞானம் தேவைப்படுகிறது. அதனால் நாம் சரஸ்வதி தேவியை இந்த ஞானத்தை எனக்கு வாழ்நாள் முழுவதும் கொடு என்று கலைஞர்கள் மட்டுமல்ல. அத்தனை பேரும் தாராளமாகக் கேட்கலாம் என்பதை நினைவில் கொண்டு வழிபடுங்கள்.