இது என்ன தமிழ்நாடு அரசா? இல்லை டிராமா கம்பெனியா? பாரதியாரை பிடிக்காது, ஆனால் பாரதியாரின் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற வரி மட்டும் பிடிக்குமா?

“கல்வி சிறந்த தமிழ்நாடு” என்ற தமிழக அரசின் விழா குறித்து இளம்பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: “கல்வி சிறந்த தமிழ்நாடு” –…

kalviyil 1

“கல்வி சிறந்த தமிழ்நாடு” என்ற தமிழக அரசின் விழா குறித்து இளம்பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

“கல்வி சிறந்த தமிழ்நாடு” – இந்தப் பாடல் வரியை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? இது மகாகவி பாரதியார் இயற்றிய “செந்தமிழ்நாடு நாடெனும் போதினிலே” என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது. ஆனால், திராவிட கொள்கையை தாங்கிப் பிடிப்பதாக கூறும் ஈ.வே.ரா. பெரியார், “செந்தமிழ் நாடெனும் போதினிலே வெங்காயம் வந்து பாயுது காதுக்குள்ளே” என்று பேசியவர். எனவே, இந்த பாடல் வரியை தங்கள் நிகழ்ச்சியின் தலைப்பாக வைப்பதற்கு தி.மு.க. அரசுக்கு எந்த அருகதையும் இல்லை.

அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், இந்த குற்றச்சாட்டை சரிசெய்ய தைரியம் இல்லாமல், தமிழக அரசு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. அந்த நிகழ்ச்சியில், குழந்தைகளை மேடைக்கு வரவழைத்து, அவர்களுக்கு நல்ல தரமான உணவை கொடுத்து, அதை “கல்யாண வீட்டு சாம்பார்” போல உள்ளது என்று போலியாக பேச வைத்துள்ளனர்.

குழந்தைகளுக்கு கெட்டுப்போன உணவை கொடுப்பதாகக் குற்றச்சாட்டு இருக்கும்போது, அதை சரிசெய்வதற்கு பதிலாக, இதுபோன்ற நாடகங்களை நடத்துவது வேதனையாக உள்ளது. ஒரு நல்ல அரசு, குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக தீர்வு காணும். மாறாக, மக்களை ஏமாற்ற இதுபோன்ற நாடகங்களை நடத்துவது, தமிழக அரசின் தரம் குறைந்துவிட்டதையே காட்டுகிறது.

மக்கள் அவ்வளவு விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள் என்று இந்த அரசு நினைப்பது மிகவும் தவறு. இத்தகைய நாடகங்களால் மக்கள் ஏமாந்துபோவார்கள் என்று நினைப்பது மிகவும் கேவலமான செயல். எனவே, இத்தகைய செயல்களை நிறுத்துவது தி.மு.க. அரசுக்கு நல்லது. மக்கள் முட்டாள்கள் அல்ல, இவையெல்லாம் உங்களுக்கு தான் அவமானத்தை கொண்டுவரும்.

ஆகவே, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, இத்தகைய நாடகங்களை கைவிட்டு, மக்கள் பிரச்சனைகளை நேர்மையாக அணுகி, அவற்றுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். இவ்வாறு அந்த பெண் கூறியுள்ளார்.