கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற முழக்கத்துடன் தமிழக அரசு நடத்திய விழா, தமிழக அரசியல் களத்தில் ஒரு பெரிய விவாதத்தை தூண்டியுள்ளது. இந்த விழாவில் நடந்த நிகழ்வுகள், அரசின் செயல்பாடுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து சமூக வலைத்தளங்களிலும், மக்கள் மத்தியிலும் கடுமையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விவாதங்களின் மைய கருத்துக்களை பார்ப்போம்.
விழாவில் பேசப்பட்ட சில கருத்துக்கள் முரணாக இருந்ததாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். உதாரணமாக, ஒருவர் “கருவேப்பிலை சாதம், புளி சாதம்” என்று பல வகை உணவுகளை பற்றி கூற, அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் “ஐந்து நாட்களும் சாம்பார் வைப்போம்” என்று கூறியது, ஒரு திட்டமிட்ட நாடகத்தின் ஸ்கிரிப்ட் முரண்பட்டதை உணர்த்துவதாக கூறப்படுகிறது.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற அரசு விழாவை, ஒரு கட்சி விழாவை போல் நடத்துவதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். கல்வி குறித்து பேச, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அல்லது கல்வியாளர்கள், அறிவியலாளர்களை அழைக்காமல், சிவகார்த்திகேயன், வெற்றிமாறன், மிஷ்கின் போன்ற ஆளும் கட்சி ஜால்ரா பிரபலங்களை அழைத்து விழாவை நடத்தியது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் இந்த விழாவை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்றும், அதன் வீடியோ ஆதாரங்களை அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக கூறப்படுவதும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கல்வியின் தரம், பள்ளி கட்டிடங்களின் நிலை, காலை உணவுத் திட்டத்தில் உள்ள குறைகள் போன்ற உண்மையான பிரச்சனைகளை மறைக்க, இது போன்ற நாடகங்கள் நடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சிக்கின்றனர்.
இவ்வளவு சர்ச்சைகள் இந்த விழாவில் இருந்தாலும், இந்த விழா இந்திய அளவில் உற்று நோக்கப்பட்டது ஒரு பாசிட்டிவ் தான். தமிழகத்தில் தான் அதிகளவு கல்வி பயில்பவர்கள் உள்ளனர், அதிகளவு திறமையாளர்கள் உள்ளனர், தமிழர்கள் உலகம் முழுவதும் தங்கள் திறமையை நிரூபித்து மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை தேடி தருகின்றனர் என்ற உண்மை இன்று உலகம் முழுவதும் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
