தேர்தலில் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை.. கட்சியே அழிந்தாலும் பரவாயில்லை.. பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து வந்துவிட கூடாது.. அடம் பிடிக்கும் ஈபிஎஸ்.. 2026ல் தோல்வி அடைந்தாலும் எடப்பாடி தூக்கி எறியப்படுவார்.. கொதிப்பில் அதிமுக தொண்டர்கள்..!

அதிமுகவில் கடந்த சில மாதங்களாக நடந்து வரும் உட்கட்சி விவகாரங்கள், முன்னாள் முதல்வர்கள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைக்கும் முயற்சியை மையப்படுத்தியே நகர்கின்றன. ஆனால், கட்சியின் பொதுச்செயலாளர்…

edappadi

அதிமுகவில் கடந்த சில மாதங்களாக நடந்து வரும் உட்கட்சி விவகாரங்கள், முன்னாள் முதல்வர்கள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைக்கும் முயற்சியை மையப்படுத்தியே நகர்கின்றன. ஆனால், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்தக் கருத்துக்கு தொடர்ந்து முற்றுப்புள்ளி வைப்பதன் பின்னணியில், தேர்தலில் கட்சி தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை, அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து வந்துவிட கூடாது என்பதில் அவர் கவனமாக இருப்பது தெரிகிறது.

சமீபத்தில் செங்கோட்டையன் போர் கொடி தூக்கியதும், அவர் அமித்ஷாவை சந்தித்ததும், அதன் தொடர்ச்சியாக ஈபிஎஸ் அமித்ஷாவை சந்தித்ததும், பின்னர் நயினார் நாகேந்திரன் ஈபிஎஸ்ஸை சந்தித்ததும் அதிமுகவின் குழப்பமான சூழலைக் காட்டுகிறது.

தற்போதைய சூழலில், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் போன்றவர்களை சேர்த்தால் கட்சிக்கு சக்தி கூடும் என்று தெரிந்தாலும், ஈபிஎஸ் அதனை ஏற்க மறுப்பதற்கான காரணம் அவருடைய தனிப்பட்ட தலைமை பாதுகாப்பில் அவர் உறுதியாக இருப்பதுதான்.

“தோல்வியே வந்தாலும் பரவாயில்லை. ஆனால், தலைமை பொறுப்பில் நமக்கு அதிகார பங்கோ அல்லது தலைமை பதவிக்கு ஒரு தொந்தரவோ வந்துவிடக் கூடாது என்பதில் ஈபிஎஸ் உறுதியாக இருக்கிறார். அதனால்தான் அவர்களை தொடர்ந்து அவர் புறக்கணிக்கிறார். அவர் கட்சியை அழித்தாலும் அழிப்பாரே தவிர, அவர்களை சேர்ப்பதற்கு ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டார்” என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியபோதே உடனே அவரது கட்சி பதவியை நீக்கியதற்கு காரணம், இதே கருத்தை நேரடியாக வேறு யார் சொன்னாலும் அவர்களுக்கு இதே கதி தான் என்ற எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

அதிமுகவின் முக்கிய பலங்களில் ஒன்றான கொங்கு மண்டலம். கொங்கு மண்டலத்தில் அதிமுக ஏற்கெனவே பலமாக உள்ளது. பாஜகவுடனான கூட்டணியும் அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், தென் தமிழகத்தில் முக்குலத்தோர் வாக்குகள் இருக்கும் ஏரியாக்களில் ஓபிஎஸ், டிடிவி விலகலால் கட்சி பலவீனமாக உள்ளது.

“இவர்கள் எல்லாம் வந்தால்தான் நமக்கு ஒரு பலம் கிடைக்கும். இங்கிருந்து சீட்டுகள் வராமல் வெறும் கொங்கு மண்டலத்தில் மட்டும் 50-60 சீட்டுகள் ஜெயித்தால், மீண்டும் இதே நிலைமைதான் வரும், ஆட்சிக்கு வர முடியாது. 117-118 சீட்டுகளுக்கு போக வேண்டுமானால், தென் தமிழகத்தையும் பார்க்க வேண்டும்” என்ற விரக்தியான பேச்சு தென் மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் நிலவுவதாகவும், ஆனால் இந்த பேச்சுகளை யாரும் ஈபிஎஸ்ஸிடம் கொண்டு செல்ல தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது.

“தன்மானம் தான் முக்கியம், வெற்றி கூட நமக்குத் தேவையில்லை” என்று ஈபிஎஸ் ஒரு கூட்டத்தில் பேசியதில் இருந்து அவருக்கு தேர்தலில் வெற்றியோ, முதலமைச்சர் பதவியோ கூட பெரிது இல்லை, கட்சி தலைமை பதவிதான் பெரிது என்று நினைப்பது தெரிகிறது. இப்படி ஒருவரை தலைவராக வைத்திருப்பதால் தான் அதிமுக தொண்டன் கூட விஜய்க்கு ஓட்டு போடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.