திமுக – தவெக போட்டி என்பது இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி போன்றது.. கடைசி வரை த்ரில் இருக்கும்.. ஒருகாலத்தில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு டஃப் கொடுத்தது. ஆனால் அப்போது இம்ரான்கான், வாசிம் அக்ரம் இருந்தனர்.. இன்று பாகிஸ்தான் ஒரு ஜுஜுபி அணி தான்.. அதுபோல் தான் தவெகவுக்கு திமுக?

இந்திய அரசியலில் தமிழகம் எப்போதும் தனித்துவமான ஓர் அரசியல் களம். இங்கு அரசியல் மாற்றங்கள் பெரும்பாலும் எதிர்பாராத வகையில் நிகழும். இப்போது, ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சி, பாரம்பரியமிக்க திராவிட முன்னேற்றக்…

india vs pak

இந்திய அரசியலில் தமிழகம் எப்போதும் தனித்துவமான ஓர் அரசியல் களம். இங்கு அரசியல் மாற்றங்கள் பெரும்பாலும் எதிர்பாராத வகையில் நிகழும். இப்போது, ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சி, பாரம்பரியமிக்க திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக கிளம்பியிருப்பது, தமிழக அரசியல் களத்தை மேலும் பரபரப்பாக்கி உள்ளது. இது, ஒரு காலத்தில் வலுவான அணிகளாக இருந்த இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தற்போது ஒரு பெரிய அணிக்கு எதிராக சிறிய அணி களமிறங்குவது போன்றது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் உலக அளவில் உச்சகட்ட விறுவிறுப்பை ஏற்படுத்தும். இரு அணிகளும் சம பலத்துடன் இருந்ததால், எந்த அணி வெல்லும் என்பதை இறுதி பந்து வரை கணிக்க முடியாது. அப்போது பாகிஸ்தான் அணியில் இம்ரான் கான், வாசிம் அக்ரம் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தனர். இந்திய அணியிலும் சச்சின் டெண்டுல்கர், அசாருதீன் போன்ற நட்சத்திரங்கள் இருந்ததால், இந்த போட்டி ஒரு சர்வதேச தரமிக்க மோதலாக இருந்தது.

இதேபோல், தமிழக அரசியலில் நீண்டகாலம் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சம பலத்துடன் இருந்தன. தமிழக வாக்காளர்கள் பெரும்பாலும் இந்த இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்தனர். ஒரு கட்சி வெற்றி பெற்றால், அடுத்த தேர்தலில் மற்றொரு கட்சி வெற்றி பெறும் என்ற நிலை தொடர்ந்தது. ஆனால், தற்போது பாகிஸ்தான் அணியில் இம்ரான் கான், வாசிம் அக்ரம் போன்ற அனுபவமிக்க வீரர்கள் இல்லாததுபோல், அதிமுகவில் மக்களை கவரும் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை என்பது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறகு, அதிமுகவில் ஒரு பொதுவான தலைமை இல்லாதது, தொண்டர்களுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பிணைப்பை உருவாக்க முடியவில்லை. இதுவே கட்சிக்கு ஒரு பெரிய பலவீனமாக மாறியுள்ளது.

இந்த நிலையில், திமுக தனது பாரம்பரிய பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பிறகு, மு.க.ஸ்டாலின் ஒரு ஆளுமைமிக்க தலைவராக உருவெடுத்து, கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்தார். இது, திமுக எப்போதும் ஒரு வலிமையான கட்சிதான் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியது. திமுகவின் பலமான அமைப்பும், அதன் அனுபவமிக்க நிர்வாகிகளும், இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகின்றன.

இந்த நிலையில் கிரிக்கெட் களத்தில் எப்போதாவது வலிமையான அணிகளான ஆஸ்திரேலிய, நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து போன்ற அணிகளை நெதர்லாந்து, ஜிம்பாவே போன்ற சிறிய அணிகள் வென்று ஆச்சரியத்தை அளிக்கும். அதுபோல் தமிழக அரசியலில் நடிகர் விஜய் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ மூலம் களத்தில் இறங்கியுள்ளார். சினிமா உலகின் நட்சத்திரமான விஜய், கடந்த இரண்டு ஆண்டுகளாக, அரசியல் ரீதியான கூட்டங்களை நடத்தி, மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு வருகிறார். அவரது கூட்டங்களில் திரளும் மக்கள் கூட்டம், திமுகவுக்கு ஒருவிதமான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக, ஒரு பெரிய அணி ஒரு சிறிய அணியை எதிர்கொள்ளும்போது, அது அந்த அணியை எளிதாக குறைத்து மதிப்பிடும். ஒருவேளை, எதிர்பாராத விதமாக அந்த பெரிய அணி தோல்வி அடைந்தால், அது கவனக்குறைவு காரணமாகவே இருக்கும். அதுபோல், தற்போது திமுக, த.வெ.க-வை ஒரு பெரிய அச்சுறுத்தலாக கருதாமல், ஒரு சாதாரண சக்தியாகவே கருதுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இப்போது தாமதமாக விஜய்யின் சக்தியை திமுக புரிந்து கொண்டு சுதாரித்து பதிலடி கொடுத்து வருகிறது. விஜய் நடத்தும் கூட்டங்களுக்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கையும், சமூக வலைத்தளங்களில் அவரது பிரசாரம் பெறும் ஆதரவும், அவர் ஒரு புதிய அரசியல் சக்தியாக உருவாகி வருவதை பார்த்து, திமுகவும் விஜய் எங்கெல்லாம் கூட்டம் போடுகிறாரோ அதே இடத்தில் பதில் கூட்டம் போட்டு வருகிறது. ஆனால் வெகு தாமதமாக அதாவது ஒரு ஓவரில் 30 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் பெரிய அணி சுதாரிக்க நினைப்பது போல் திமுகவின் செயல்பாடு உள்ளதாகவும், விஜய் கிட்டத்தட்ட வெற்றியின் விளிம்புக்கு வந்த பின்னர் தான் திமுக சுதாரித்து பதிலடி கொடுத்து வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எனவே, கிரிக்கெட்டில் எப்போதாவது ஆச்சரியமான வெற்றி ஒரு சிறிய அணிக்கு கிடைப்பது போல் பாரம்பரியமிக்க திமுகவை, புதிதாக களமிறங்கிய ‘தமிழக வெற்றிக் கழகம்’ வீழ்த்துமா? ஒரு பெரிய அரசியல் கட்சியை வீழ்த்தும் மேஜிக்கை தவெக செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.