நவராத்திரியின் முதல் 3 நாள் வழிபாடு… அம்மனின் ரூபம், நைவேத்தியம் லிஸ்ட் இதோ…

இந்த ஆண்டு நவராத்திரி விழா முதல் நாள் திங்கள் கிழமையான (22.9.2025) அன்று துவங்கி வரும் 2.10.2025அன்று வரை நடக்கிறது. அதிகமான நாள்கள் வருகிறதே என எண்ணலாம். இந்த ஆண்டு 10 நாள் நவராத்திரியாகவும்,…

இந்த ஆண்டு நவராத்திரி விழா முதல் நாள் திங்கள் கிழமையான (22.9.2025) அன்று துவங்கி வரும் 2.10.2025அன்று வரை நடக்கிறது. அதிகமான நாள்கள் வருகிறதே என எண்ணலாம். இந்த ஆண்டு 10 நாள் நவராத்திரியாகவும், 11வது நாள் விஜயதசமியாகவும் வருகிறது. முதல் நாளில் அம்பாளின் பெயர் உமா மகேஸ்வரி. வெண்பொங்கல் அல்லது சுண்டல் நைவேத்தியமாக வைத்து வழிபடுவர். வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலப்பொருள்களான மஞ்சள், குங்குமம் கொடுத்தால் கூட போதும்.

2ம் நாள் விழாவில் அம்பாளின் பெயர் துர்க்கை. இவரை மகாபரமேஸ்வரியாக, அம்பிகையாக வழிபடுகிறோம். மனதில் தேவையற்ற பயம் இருந்தால் துர்க்கை அம்மனைப் போய் வழிபடலாம். 2ம் நாளில் அம்பிகையின் பெயர் ஸ்ரீராஜ ராஜேஸ்வரி. வேர்க்கடலை, சுண்டலை நைவேத்தியமாக வைத்து வழிபடலாம். முல்லைப்பூ கொண்டு அர்ச்சனை செய்யலாம்.

3வது நாளில் துர்க்கா தேவியை நாம் வழிபடும் நிறைவு நாள். ஆற்றல் மிகுந்த சக்தியைத் தருபவள் தான் துர்க்கை. அவளது உக்கிரமான நிலை காளி. இந்த வழிபாட்டில் இன்றும் பலருக்குப் பயம். தன்னை அண்டி வந்தவருக்கு துன்பம் வரும்போது அவளுக்குக் கோபம் வராமல் வேறு யாருக்கு வரும்? காப்பாத்த வேண்டும் என்ற வேகம் தான் காளிக்கு வருகிறது.

அது கருணையின் வடிவம். அதன்பிறகு அவள் குழந்தை வடிவமாகி விடுகிறாள். அந்த ரூபத்தை நாம் பார்க்க வேண்டும். 3ம் நாளில் அம்பிகையின் திருநாமம் வராஹி. அன்று சம்பங்கி மலரைப் பயன்படுத்தலாம். சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியமாக வைத்து வழிபடலாம்.