சீனாவுக்கும் இந்தியாவுக்கும் வரி விதிக்க முடியாது.. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ.. டிரம்புக்கு பதிலடி கொடுத்த ஐரோப்பிய யூனியன்.. கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடி வச்சா டிரம்ப் என்ன தான் பண்ணுவார்? இந்தியாவை ஐரோப்பிய யூனியன் பகைக்க முடியுமா?

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர, சீனா மற்றும் இந்தியா மீது கடுமையான வரிகளை விதிக்க வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் வெளிப்படையாக நிராகரித்துள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்…

modi trump 3

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர, சீனா மற்றும் இந்தியா மீது கடுமையான வரிகளை விதிக்க வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் வெளிப்படையாக நிராகரித்துள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், அமெரிக்காவின் வரிவிதிப்பு அழுத்தத்திற்கு அடிபணியாமல், தனது தனித்துவமான வியூகத்தை பின்பற்றும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

டிரம்ப்பின் கோரிக்கைக்குக் பதிலளித்த உர்சுலா வான் டெர் லேயன், “ஐரோப்பிய ஒன்றியம் தனது சொந்த முடிவுகளை எடுக்கும்” என்று உறுதியாக கூறினார். மேலும், ரஷ்யாவை பேச்சுவார்த்தை கொண்டுவர, ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சி போதுமானது என்றும் அவர் வலியுறுத்தினார். அதிகரித்து வரும் புவிசார் அரசியல் சூழல் காரணமாக, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் தங்கள் கூட்டாண்மைகளை, குறிப்பாக இந்தியாவுடன், பொதுவான நலன்களின் அடிப்படையில் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அட்லாண்டிக்கின் இருபுறமும் உள்ள நாடுகளுடனும் G7 நாடுகளுடனும் ஒத்துழைப்பை தொடர ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது என்றும் காணொளி தெரிவிக்கிறது.

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் டொனால்ட் டிரம்ப் விரக்தியுடன் இருப்பதாகவும், சீனா மற்றும் இந்தியா இரண்டிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விடுத்ததாகவும் இந்த அவர் குறிப்பிட்டார். ரஷ்ய எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது டிரம்ப் ஏற்கனவே 25% அபராத வரி விதித்ததை ஐரோப்பிய யூனியன் எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டுள்ள இந்த துணிச்சலான நடவடிக்கை, அமெரிக்காவுக்கு ஐரோப்பிய யூனியன் பணியாது என்பதும், இந்தியா, சீனாவுடன் அவை நட்புடன் இருக்க விரும்புவதையும் வெளிப்படுத்தியுள்ளது.