முள்ளை முள்ளால் தான் எடுக்கனும்.. கூட்டணியால் வெற்றி பெற்று வரும் திமுகவை அதே கூட்டணியால் வீழ்த்துமா தவெக? விஜய் வகுக்க போகும் வேற லெவல் வியூகம்.. மாறுகிறது தமிழக அரசியல் களம்.. விரைவில் திராவிடம் இல்லா தமிழகம்..!

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் அரங்கில் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வின் கூட்டணிகள் குறித்து அரசியல் விமர்சகர்கள் மற்றும் தலைவர்கள்…

alliance

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் அரங்கில் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வின் கூட்டணிகள் குறித்து அரசியல் விமர்சகர்கள் மற்றும் தலைவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசியலில் முதல்முறையாக கூட்டணி என்பது 1967 சட்டமன்ற தேர்தலில் தான் தொடங்கியது. ராஜாஜியின் சுதந்திராக் கட்சி, சி.பி.எம். உட்பட பல்வேறு கட்சிகளுடன் தி.மு.க. கூட்டணி அமைத்து, காமராஜர் தலைமையிலான காங்கிரஸை வீழ்த்தியது. காங்கிரஸை விட தி.மு.க. ஒரு லட்சம் ஓட்டுகள் குறைவாக பெற்றபோதும், கூட்டணியின் பலத்தால் வெற்றி பெற்றது.

1971 சட்டமன்றத் தேர்தல்லில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ், பாராளுமன்றத் தேர்தலில் 10 இடங்களை வென்றது. ஆனால், சட்டமன்ற தேர்தலில் ஒரு இடம்கூடப் பெறவில்லை.

1980 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி கிடைப்பதாக இருந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் எம்.பி. சுப்பிரமணியம் “முதலமைச்சர் யார் என்பதை தேர்தல் முடிந்த பிறகு முடிவு செய்வோம்” என்று கூறியதால், கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இதனால், எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தார்.

2006 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, காங்கிரஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அப்போது காங்கிரஸ், மந்திரி சபையில் பங்கு கேட்டது, ஆனால் சோனியா காந்தியின் தலையீட்டால் அந்த பேச்சு அடிபட்டது. தி.மு.க. எப்போதுமே கூட்டணி பலத்தால்தான் மட்டுமே வெற்றி பெற்று வந்துள்ளது என்பது வரலாறு.

2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 34% வாக்குகள் கிடைத்தன. அதில் 8% முதல் 12% வரை ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் போன்றவர்களால் பிரிக்கப்பட்டது. ஈபிஎஸ் மட்டும் இவர்கள் இருவரையும் கூட்டணியில் சேர்த்திருந்தால் மீண்டும் அதிமுக ஆட்சி தான் வந்திருக்கும்.

2026 தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு எதிரான அலை, மீண்டும் இணைந்த அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பிரிக்கும் வாக்குகள், தி.மு.க.வுக்கு கிடைக்கும் சிறுபான்மையினர் வாக்குகள் பிரிவது என பலதையும் கணித்து பார்க்கும்போது தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு குறையும் என்றும் கூறப்படுகிறது.

அண்மைக் காலமாக, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கை முக்கியத்துவம் பெற்று வருகிறது. தவெக தலைவர் விஜய் இந்த விவகாரத்தை தொடங்கி வைத்தார். அதுவரை ஆட்சியில் பங்கு என்பதை பயத்துடன் முன்வைத்த காங்கிரஸ், விசிக இப்போது வெளிப்படையாகவே ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைக்கிறது. முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களும் இதையே வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றாலும், அதன் பலனை தி.மு.க.வே அனுபவிக்கிறது என்றும், காங்கிரஸ் சக்கையை மட்டுமே பார்க்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கோரிக்கை, தி.மு.க. கூட்டணிக்குள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வி.சி.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிக இடங்களை எதிர்பார்க்கின்றன. ஆனால், இந்த கட்சிகள் தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியே வந்து, அ.தி.மு.க. – பா.ஜ.க.வுடன் இணைய வாய்ப்பில்லை. அதேநேரத்தில் ஆட்சியில் பங்கு கிடைக்கும் என்பதால் அவர்கள் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது.

எனவே 2021ல் இருந்த தி.மு.க.வின் பலம் தற்போது இல்லை என்றும், அதன் வாக்கு வங்கி 33% ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், தி.மு.க. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றிவிட்டதாக கூறும் ஸ்டாலினின் பேச்சு, உண்மைக்கு மாறானது என்றும் மக்கள் மத்தியில் ஒரு பேச்சு உள்ளது.

மொத்தத்தில் இதுவரை தமிழக வரலாற்றில் கூட்டணி என்பது வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பதால், 2026 தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெறும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. தவெகவுடன் காங்கிரஸ் மற்றும் விசிக கூட்டணி சேர்ந்தாலோ, அல்லது பாஜக இல்லாத அதிமுகவுடன் தவெக கூட்டணி சேர்ந்தாலோ வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.