மோடி, அமித்ஷா, ஈபிஎஸ் கூட ஸ்டாலினை நேரடியாக அட்டாக் செய்யவில்லை.. விஜய் அட்டாக் டைரக்ட் ஸ்டாலின் தான்.. நேரடியாக திமுக அரசு தான்.. விஜய்க்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது? பின்னால் இருக்கும் பவர்ஃபுல் சக்தி யார்? கண்டுபிடிக்க முடியாமல் திமுக திணறல்..!

தமிழ்நாட்டு அரசியலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எடுத்து வரும் அதிரடி நகர்வுகள், அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. குறிப்பாக, கடந்த சில நாட்களாக அவர் நிகழ்த்தி வரும் அரசியல் பயணங்கள், திமுக…

vijay vs stalin 2

தமிழ்நாட்டு அரசியலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எடுத்து வரும் அதிரடி நகர்வுகள், அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. குறிப்பாக, கடந்த சில நாட்களாக அவர் நிகழ்த்தி வரும் அரசியல் பயணங்கள், திமுக அரசுக்கு நேரடி சவால் விடுக்கும் விதமாக அமைந்துள்ளன. இந்திய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழகம் வந்தபோது கூட திமுகவை விஜய் அளவுக்கு கடுமையாக விமர்சிக்கவில்லை. ஏன் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி கூட பயன்படுத்தாத வார்த்தைகளையும், தாக்குதலையும் விஜய் நேரடியாக திமுக மற்றும் அதன் குடும்ப உறுப்பினர்கள் மீது தொடுத்துள்ளார். இது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

திமுகவின் கோட்டையாக கருதப்படும் திருவாரூரில் பேசிய விஜய், “உங்கள் தந்தையான கலைஞர் திருவாரூர் தேரை ஓட வைத்தார். ஆனால், அவரது மகன் தமிழ்நாடு என்ற தேரை ஓடவிட மாட்டேன் என்கிறார்,” என்று நேரடியாக ஸ்டாலின் பெயரை குறிப்பிடாமல் அவரை தாக்கினார். மேலும், “ஒரு குடும்பத்தால் கொள்ளையடிக்கப்படும் ஆட்சி” என்றும், “விவசாயிகளிடமிருந்து கமிஷன் வாங்குகிறீர்கள்” என்றும் கடுமையாக விமர்சித்தார்.

இந்த வகையான நேரடி தாக்குதலை, தேசிய அளவிலான தலைவர்கள்கூட தமிழக அரசியலில் செய்ய தயங்குவது வழக்கம். குறிப்பாக, மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர், தமிழகம் வரும்போது திமுகவை விமர்சித்தாலும், அது பெரும்பாலும் பொதுவான குற்றச்சாட்டுகளாகவே இருக்கும். தனிப்பட்ட தாக்குதல்களையோ, குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விமர்சனங்களையோ அவர்கள் பெரும்பாலும் தவிர்த்துவிடுவர். ஆனால், விஜய் இந்த எல்லா கட்டுப்பாடுகளையும் மீறி நேரடியாக தாக்குதல் நடத்துகிறார். விஜய்க்கு எப்படி இந்த அளவுக்குத் தைரியம் வந்தது?

விஜய்யின் இந்த தைரியத்திற்குப் பின்னால் ஒரு வலுவான அரசியல் சக்தி இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அவர் தனியாக இந்த முடிவுகளை எடுத்திருக்க வாய்ப்பில்லை என்றும், ஒரு பெரிய கட்சியின் ஆதரவு அவருக்கு இருக்கலாம் என்றும் பரவலாக பேசப்படுகிறது. இந்த நிலையில், பின்னால் இருந்து இயக்கும் அந்த சக்தி யார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் நிலவி வருகின்றன.

பாஜக, தமிழ்நாட்டில் ஒரு வலுவான நடிகரை தங்கள் பக்கம் இழுக்க நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருகிறது. ரஜினிகாந்த், விஜய் போன்ற நடிகர்களை அரசியலுக்குள் கொண்டு வர முயற்சி செய்தது. ஆனால் அது நடக்கவில்லை. ரஜினி அரசியலுக்கு வரவே இல்லை, அரசியலுக்கு வந்த விஜய்யும் பாஜகவுக்கு எதிராக உள்ளார். ஆக ஒருவேளை விஜய்யின் பின்னால் ராகுல் காந்தி இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக சில முன்னாள், இந்நாள் அரசு அதிகாரிகள் இருக்கலாம் என்றும், திமுக அரசுக்கு எதிரான வெறுப்பை, விஜய்யின் வாயிலாக வெளிப்படுத்த அவர்கள் ஆதரவு அளிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.விஜய்க்கு அரசியல் மற்றும் நிர்வாக திறன்கள் குறித்த ஆலோசனைகளை வழங்க, அனுபவம் வாய்ந்த முன்னாள் அரசியல்வாதிகள் அல்லது அதிகாரிகள் குழு ஒன்று இருக்கலாம் என்றும், இது, அவரது பேச்சுக்களுக்கு தேவையான தரவுகளையும், துணிச்சலையும் வழங்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது.

விஜய்யின் நேரடி தாக்குதல்கள் திமுகவினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. இதுவரை அதிமுக, பாஜக போன்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை சமாளித்த திமுக, ஒரு புதிய அரசியல் சக்தியின் நேரடியான விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் திணறி வருகிறது. ஆரம்பத்தில், விஜய்யின் பேச்சுகளை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் கடந்து சென்றனர். ஆனால், விஜய்யின் தாக்குதல்கள் தீவிரமடைந்த நிலையில், அவரை ஒரு நடிகராக மட்டுமே பார்க்க முடியாது என்பதை திமுக உணர்ந்துள்ளது.

திமுகவின் செய்தி தொடர்பாளர்கள், விஜய்யின் பேச்சுகளுக்கு பதிலளித்தாலும், அதை சமாளிக்க முடியாமல் தள்ளாடுகின்றனர். விஜய்க்கு பின்னால் இருக்கும் சக்தி எது என்பது தெரியாத நிலையில், எந்த ஒரு கடுமையான வார்த்தையையும் பயன்படுத்த அவர்கள் தயங்குகின்றனர். எனவே திமுகவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தத்தில், விஜய்யின் இந்த துணிச்சலான அரசியல் பிரவேசம், தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் சமன்பாட்டை உருவாக்கியுள்ளது. அவருக்கு பின்னால் இருக்கும் சக்தி யார், அது எந்த அளவுக்கு வலுவானது என்பது எல்லாம் மக்களுக்கு தேவையில்லாதது. மக்களை பொருத்தவரை தமிழ்நாடு திராவிட கட்சிகளிடம் இருந்து விடுதலை பெற வேண்டும், அதுவே மக்களின் நோக்கமாக உள்ளது.