மீண்டும் ஜெயித்துவிட்டாரா கவின்.. காமெடியில் கலக்கல்.. ஒரே ஒரு கிஸ்ஸூக்கு இத்தனை அர்த்தமா? நெல்சன் பாணியில் டார்க் காமெடி.‘கிஸ்’ படத்தின் திரைவிமர்சனம்..

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, நடிகர் சிவகார்த்திகேயனை போலவே குறுகிய காலத்தில் ரசிகர்களின் ஆதரவை பெற்ற நடிகர் கவின். இவர் நடித்த ‘டாடா’, ‘லிஃப்ட்’ போன்ற திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெற்றதால், தமிழ் திரையுலகின்…

kavin

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, நடிகர் சிவகார்த்திகேயனை போலவே குறுகிய காலத்தில் ரசிகர்களின் ஆதரவை பெற்ற நடிகர் கவின். இவர் நடித்த ‘டாடா’, ‘லிஃப்ட்’ போன்ற திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெற்றதால், தமிழ் திரையுலகின் நம்பிக்கைக்குரிய இளம் நட்சத்திரமாக அவர் உருவெடுத்தார். இருப்பினும், அவரது சமீபத்திய படங்களான ‘ஸ்டார்’ மற்றும் ‘பிளடி பெக்கர்’ எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை. இதனால், மீண்டும் ஒரு வெற்றி படத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் கவின் இருந்த நிலையில் தான் இன்று அவரது ‘கிஸ்’ படம் ரிலீஸ் ஆகியுள்ளது.

நடன இயக்குநர் சதீஷ் முதல்முறையாக இயக்கியுள்ள ‘கிஸ்’ திரைப்படம், கவினுக்கு ஒரு முக்கிய திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில், கவினுக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். இவர்களுடன் விடிவி கணேஷ், சக்தி மற்றும் ஆர்.ஜே. விஜய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கிஸ்’ திரைப்படம், கற்பனை கலந்த ஒரு வித்தியாசமான காதல் கதையை அடிப்படையாக கொண்டது. இது ஒரு வழக்கமான காதல் கதை இல்லை. டைட்டில் ‘கிஸ்’ என்று இருந்தாலும், கதை அதன் விளைவுகளை பற்றியதுதான். முத்தத்தால் ஏற்படும் விளைவுகள் என்ன, அதற்கான பின்னணி கதை என்ன என்பதுதான் படத்தின் மையம். இதை இயக்குநர் சதீஷ் ஒரு புதிய கோணத்தில் அணுகியுள்ளார்.

சதீஷின் இயக்கம் இயக்குநர் நெல்சன் பாணியில் இருப்பதை படம் பார்க்கும்போது உணர முடிகிறது. குறிப்பாக நெல்சனின் படங்களுக்குரிய “டார்க் ஹியூமர்” காமெடி இதில் சிறப்பாக வேலை செய்திருக்கிறது.

படத்தின் முக்கிய பலம் காமெடி காட்சிகள் பார்க்கப்படுகின்றன. விடிவி கணேஷ் மற்றும் ஆர்.ஜே. விஜய் ஆகியோரின் நடிப்பு, குறிப்பாக இரண்டாம் பாதியில், திரையரங்கையே சிரிப்பலையில் ஆழ்த்தியது. அவர்களின் நகைச்சுவை, படம் முழுவதும் ரசிக்கும்படியும் முக்கியமாக விடிவி கணேஷ் தனது கதாபாத்திரத்தில் கலக்கிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

கவின் மற்றும் நாயகி ப்ரீத்தி அஸ்ரானி இருவருக்கும் இடையே உள்ள கெமிஸ்ட்ரி சிறப்பாக உள்ளது. அவர்களின் காதல் காட்சிகள் பார்க்க ரசிக்கும்படி உள்ளது என்பது ஒரு பாசிட்டிவ்.

படத்தின் தலைப்பு, இளைஞர்களை ஈர்க்கும் வகையில் இருந்தாலும், உள்ளடக்கத்தில் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் ஏதும் இல்லை. இது குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கக்கூடிய ஒரு திரைப்படம் என்று உறுதியாக சொல்லலாம். காதல், காமெடி, உணர்ச்சிகள் என அனைத்தும் சரியான அளவில் கலந்துள்ளதால், இது அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும்.

ஜென் மார்ட்டி இசையமைப்பில் ஒருசில இடங்களில் பாடல்களும், பின்னணி இசையும் நன்றாக இருந்தது. குறிப்பாக இடைவேளையின்போது வரும் இசை சூப்பராக இருந்தது. மொத்தத்தில், இது சிரித்து மகிழ்ந்து ஜாலியாக பார்த்துவிட்டு வரும் ஒரு படம் என்பது குறிப்பிடத்தக்கது.