தடைகளே உனக்கொரு படிக்கல்லுப்பா.. திமுக தடைகள் அதிகரிக்க அதிகரிக்க விஜய்க்கு லாபம்.. வெட்ட வெட்ட தான் மரம் வளரும்.. விஜய் கூட்டத்திற்கு திமுக அரசு கொடுக்கும் குடைச்சலும் விஜய்யின் தைரியமும்.. ஒரு புதிய கட்சியை பார்த்து இவ்வளவு பயமா?

‘தமிழக வெற்றி கழகம்’ தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டங்களுக்குத் தொடர்ச்சியாக அனுமதி மறுக்கப்படுவது குறித்து தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக, திமுக அரசு விஜய்யை பார்த்து அஞ்சுவதே இதற்குக் காரணம் என்று அரசியல்…

vijay vs stalin 1

‘தமிழக வெற்றி கழகம்’ தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டங்களுக்குத் தொடர்ச்சியாக அனுமதி மறுக்கப்படுவது குறித்து தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக, திமுக அரசு விஜய்யை பார்த்து அஞ்சுவதே இதற்குக் காரணம் என்று அரசியல் விமர்சகர்களும், தவெகவின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமாரும் குற்றம் சாட்டுகின்றனர்.

செப்டம்பர் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை, ஒவ்வொரு சனிக்கிழமையிலும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக, திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூரில் நடைபெறும் கூட்டங்களுக்கு அனுமதி கேட்டு, தவெக சார்பில் காவல்துறைக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால், எந்த இடத்திற்கும் அனுமதி கிடைக்கவில்லை. இதை கண்டித்து, சி.டி.ஆர். நிர்மல் குமார் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி போன்ற தலைவர்களின் சாலை வழி பயணங்களுக்கு எந்தவித தடையும் இல்லாமல் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், விஜய்யின் மக்கள் சந்திப்பிற்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது. நாங்கள் விடுமுறை நாளான சனிக்கிழமைகளில் மட்டுமே பயணம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இது, மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு எந்த தொந்தரவும் இருக்காது என்பதற்காகத்தான்” என்று தெரிவித்தார்.

அரசியல் விமர்சகர்கள் கருத்துப்படி, திமுக அரசு விஜய்யின் அரசியல் எழுச்சியை கண்டு பயப்படுகிறது. “ஒரு சவாலராக விஜய் வந்திருக்கிறார் என்ற வைராக்கியத்தில்தான் அவர்கள் இப்படி செயல்படுகிறார்கள். விஜய்யை பார்த்து திமுக அரசு எவ்வளவு தூரம் அஞ்சுகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” என்று அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், இந்த தடை மூலம் விஜய்யின் மன உறுதியை குலைக்கவும், அவர் பொதுமக்களுடன் நேரடியாக பேச விடாமல் தடுக்கவும் முயற்சி நடப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.

அரசு இவ்வாறு அடக்குமுறையைக் கையாளும்போது, எதிர்க்கட்சியாக எப்படி செயல்பட வேண்டும் என்பதை விஜய் திமுகவிடமிருந்தே கற்றுக்கொள்ள வேண்டும். அறவழியில், வன்முறை இல்லாத போராட்டங்களை முன்னெடுத்தால், அது ஆட்சியாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்” என்று விமர்சகர்கள் தெரிவித்தனர்.

மக்கள் ஆதரவு இருக்கும்பட்சத்தில், சட்டரீதியான போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் போன்ற அமைதியான முறைகளை பின்பற்றி தனது நோக்கத்தை அடைய முடியும். இந்த தடைகள் விஜய்யை மேலும் வலுப்படுத்தும் என்றும், எதிர்ப்புகள்தான் ஒரு தலைவரை உருவாக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.