மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. பிரியாணி, மதுபானம் போன்ற அம்சங்கள் இல்லாமல், தொண்டர்களின் பாசத்தால் மட்டுமே மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது என்று ட்விட்டர் ஸ்பேஸ் நிகழ்ச்சிகளில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த மாநாடு, மற்ற அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு ஒரு ஓப்பன் சவாலாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
வழக்கமாக அரசியல் கட்சி மாநாடுகள் நடக்கும்போது, தொண்டர்கள் இலவசமாக உணவும், சில சமயங்களில் பணமும் கொடுத்து அழைத்து வரப்படுவார்கள். ஆனால், தவெக மாநாடு இதற்கு நேர்மாறாக அமைந்தது. மாநாடு நடந்த இடத்தில் கடை வைத்தவர்களுக்கு லட்சக்கணக்கில் வருமானம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இது, எந்தவொரு அரசியல் கட்சி மாநாட்டிலும் இதுவரை நடக்காத ஒரு புதுமை. ஒருவேளை வேறு கட்சியினர் நடத்திய கூட்டத்தில் கடை வைத்திருந்தாலும், அராஜகமாக பணம் கொடுக்காமல் பொருளை எடுத்து செல்லும் அராஜகம் தான் நடந்துள்ளது, பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டுவதற்கு பதிலாக, மாநாட்டுக்கு வந்தவர்களால் உள்ளூர் பொருளாதாரத்திற்கு பெரும் நன்மை கிடைத்துள்ளது. இது, தவெகவின் தனித்துவமான அணுகுமுறையாகப்பார்க்கப்படுகிறது.
திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் கூட்டங்களில், பெரும்பாலும் காசு கொடுத்து அழைத்து வரப்பட்டவர்களே அதிகம் இருப்பார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக உண்டு. ஆனால், விஜய்யின் மாநாட்டில் கூடிய கூட்டம் முற்றிலும் அன்பாலும், பாசத்தாலும் கூடியது என்று அவரது ஆதரவாளர்கள் பெருமிதம் கொள்கின்றனர். விஜய்யின் தலைமைக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும், அவரை நேரில் காணவும் மக்கள் தாமாக முன்வந்து கூடியுள்ளனர். இந்த பாசக்கூட்டம், விஜய்யின் அரசியல் செல்வாக்கு எந்த அளவுக்கு வலுவாக உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
ட்விட்டர் ஸ்பேசில் பேசிய ஒரு ஆதரவாளர், “இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டிய விஜய்க்கு, வரும் தேர்தலில் 2 கோடி ஓட்டுகளை பெற தெரியாதா?” என்று கேள்வி எழுப்பினார். இது, விஜய்யின் மக்கள் ஆதரவு, வாக்கு வங்கியாக மாறும் என்ற அவரது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
மாநாட்டின் வெற்றியை பார்க்கும்போது, விஜய்யின் மக்கள் செல்வாக்கு, வாக்குச்சீட்டிலும் எதிரொலிக்கும் என்று பலரும் நம்புகின்றனர். அரசியல் விமர்சகர்களும், இந்த மாநாடு விஜய்க்கு ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்திருப்பதாகவும், தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தியாக அவர் உருவெடுத்து வருவதாகவும் கூறுகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
