புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மற்றும் மகாளயபட்ச காலம் குறித்துப் பார்ப்போம்.
இந்த அமாவாசைக்கு முன்பு வரும் 14 நாள்கள் மகாபட்ச காலம். இந்தக் காலத்தில் நாம் செய்யக்கூடிய முக்கியமான விஷயம் முன்னோர் வழிபாடு. இதை நாம் சரியாக செய்தால் நமக்கு வாழ்வில் உயர்வுகள் ஏற்படும். இந்த 14 நாள்களும் முன்னோர் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களது அத்தனை முன்னோர்களையும் வழிபட்டதற்குச் சமம். ஏன்னா இந்த 15 நாள்களும் வழிபடுகையில் அதற்குள் வரும் 15 திதிகளில் ஏதாவது ஒன்றில் தான் யாராக இருந்தாலும் இறந்திருப்பார்கள்.
சஷ்டி, அமாவாசை, ஏகாதசி, பிரதமைன்னு எந்த திதியில் ஒருவர் இறந்து இருந்தாலும் நமது வழிபாடு போய்ச் சேர்ந்து விடும். அப்படின்னா உங்களைச் சார்ந்த அனைவருக்கும் உற்றார், உறவினர், நட்பு என எல்லாரையும் நாம் வழிபட்ட பலன் கிடைக்கும். இந்த அற்புதமான மகாளயபட்ச காலம் நாளை (8.9.2025) அன்று தொடங்கி வரும் 21.09.2025 அமாவாசை அன்று முடிகிறது. இந்த 15 நாள்களில் நீங்கள் முன்னோர் வழிபாடு செய்கையில் நிச்சயம் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.
இந்த அற்புதமான மகாளயபட்ச காலம் நாளை (8.9.2025) அன்று தொடங்கி வரும் 21.09.2025 அமாவாசை அன்று முடிகிறது. இந்த 15 நாள்களில் நீங்கள் முன்னோர் வழிபாடு செய்கையில் நிச்சயம் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். காலையில் எள்ளும், தண்ணீரும் இறைத்து வழிபாடு செய்ய வேண்டும். காலை 6 மணிக்கு மேல், மதியம் 12 மணிக்குள் இதைச் செய்தால் போதும். அந்தத் தண்ணீரைக் கால் படாத இடத்தில் ஊற்றுங்க. இல்லன்னா சிங்க்ல ஊற்றுங்க. சூரிய பகவானைப் பார்த்து நான் தந்த இந்த தர்ப்பணமானது என் முன்னோர் அனைவருக்கும் போய்ச் சேர வேண்டும்.
என் பரம்பரையில் வந்தவர்கள், எனக்குத் தெரிந்தவர்கள், நான் வளர்த்த செல்லப்பிராணி எதுவாக இருந்தாலும் போய்ச்சேர வேண்டும்னு வழிபடுங்க. அதுக்குப் பிறகு உங்க இயல்பான வழிபாட்டைச் செய்யுங்க. அன்றைய நாள்களில் யாராவது ஒருவருக்கு தினமும் சாப்பாடு வாங்கிக் கொடுங்க. மனிதருக்கு செய்ய முடியலன்னா காகம், குருவி, பூனை, நாய்னு எதுக்காவது சாப்பாடு கொடுங்க. மாலையில் ஒரு அகல்விளக்கு தனியாக முன்னோர்களுக்குன்னு ஏற்றுங்க. இந்த தீபம் 15 நாளும் தொடர்ந்து ஏற்றுங்க. அவ்ளோ சிறப்பு இருக்கு. மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



