பாகிஸ்தானுக்கு திடீரென வந்திறங்கிய அமெரிக்க போர் விமானம்.. அதுவும் இந்தியா அடித்து துவம்சம் செய்த நூர் கான் விமானப்படை தளத்திற்கு.. ஆயுதங்கள் சப்ளையா? இந்தியாவை மிரட்ட பூச்சாண்டியா? எதுவாக இருந்தாலும் பாத்துக்கிடலாம்..! மோடி இருக்க பயமேன்..!

சமீபத்தில், அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ சரக்கு விமானமான சி-17 குளோப்மாஸ்டர், பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. இந்த நிகழ்வு, சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானம்…

C17

சமீபத்தில், அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ சரக்கு விமானமான சி-17 குளோப்மாஸ்டர், பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. இந்த நிகழ்வு, சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானம் குவைத்தில் இருந்து வந்ததாகவும், தரையிறங்கிய சில மணி நேரங்களில் மீண்டும் புறப்பட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. விமானத்தில் என்ன இருந்தது, பாகிஸ்தானில் விமானத்தில் இருந்து என்ன இறக்கினார்கள்? இந்த விமானம் வந்ததன் நோக்கம் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

நூர் கான் விமானப்படை தளம், பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய தளமான ராவல்பிண்டிக்கு அருகில் உள்ளது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தளம். சமீபத்தில் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின்போது, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதலில் இந்திய விமானப்படை இந்த தளத்தை தாக்கி, அங்கிருந்த சி-130 விமானம் உட்பட பல தளவாடங்களை அழித்தது. இந்த தாக்குதலால், விமான ஓடுபாதை செயலிழந்தது. சமீபத்தில், அந்தத் தளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக பாகிஸ்தான் கூறியது.

இத்தகைய ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தளத்தில், அமெரிக்காவின் சி-17 விமானம் தரையிறங்கியது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சி-17 குளோப்மாஸ்டர் போன்ற பெரிய ராணுவ விமானம், பொதுவாக மனிதாபிமான பணிகள் அல்லது போர் தந்திரங்கள் சார்ந்த விஷயங்களுக்காகவே பயன்படுத்தப்படும். எனவே, இந்த வருகையின் பின்னணி குறித்து பலரும் ஊகிக்கின்றனர்.

விமானம் தரையிறங்கியது குறித்து, பொதுவெளியில் கிடைக்கும் சில தொழில்நுட்பங்களை கொண்டு, விமானத்தின் வழித்தடம் கண்காணிக்கப்பட்டது. இந்த MLAT (Multilateration) தொழில்நுட்பம் மூலம், விமானம் தனது கண்காணிப்பு ரேடார்களை அணைத்துவிட்ட பிறகும், அதன் கடைசி 50 முதல் 100 மைல்கள் வரையிலான நகர்வுகள் கண்காணிக்கப்பட்டுள்ளன. இது, அமெரிக்கா இந்த நடவடிக்கையை ரகசியமாக மேற்கொள்ள விரும்பியதை காட்டுகிறது.

அமெரிக்க விமானம் அங்கு தரையிறங்கியதற்கான உடனடித் தேவை, பாகிஸ்தான் விமானப்படைக்கு தேவையான உதிரிபாகங்கள் அல்லது பழுதுபார்க்கும் கருவிகள் கொண்டு வருவதுதான்” என்று கூறப்படுகிறது. ஆபரேஷன் சிந்தூர் இந்திய தாக்குதலில் சேதமடைந்த எஃப்-16 போர் விமானங்கள் உட்பட, சில முக்கிய விமானங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர அமெரிக்கா உதவி செய்யலாம் என்றும், இதன் மூலம், அமெரிக்காவின் ராணுவ விமானங்களின் நம்பகத்தன்மையை காப்பாற்றிக்கொள்ள அது முயற்சிப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது,

மேலும், பாகிஸ்தான் தனது வான் பாதுகாப்பு திறனை மேம்படுத்த, புதிய ஏவுகணைகள், வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்கள், மற்றும் சி4ஐஎஸ்ஆர் (C4ISR) போன்ற நவீன தொழில்நுட்பங்களை எதிர்பார்க்கலாம் என்றும் இந்த நிகழ்வுகள், அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான எதிர்கால உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.