செங்கோட்டையனால் சிதறு தேங்காய் போல் சிதறும் அதிமுக… 2026 தேர்தல் விஜய் சொன்னபடி திமுக vs தவெக தான்.. மறுபடியும் நோட்டாவுக்கு கீழ் பாஜக செல்லும்.. அதிமுக படுதோல்வி அடையும்.. அரசியல் விமர்சர்கள் கணிப்பு..!

அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், திடீரென செய்தியாளர்களை சந்தித்தது, தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய புயலை கிளப்பியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்து, பிளவுபட்டவர்களை இணைக்க வேண்டும் என்று…

vijay vs stalin

அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், திடீரென செய்தியாளர்களை சந்தித்தது, தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய புயலை கிளப்பியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்து, பிளவுபட்டவர்களை இணைக்க வேண்டும் என்று அவர் விடுத்திருக்கும் எச்சரிக்கை, கட்சியின் எதிர்காலம் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

அரசியல் விமர்சகர்கள் இந்த நிகழ்வை உன்னிப்பாக கவனித்து, அ.தி.மு.க.வின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

செங்கோட்டையன் தனது பேட்டியில், ஈரோடு மாவட்டத்தில் தனக்கு தெரியாமல் நிர்வாகிகளை மாற்றியதால் தான் அதிருப்தியில் இருந்ததாக மறைமுகமாக குறிப்பிட்டார். இது தனிப்பட்ட மனக்கசப்புகளும், கட்சிக்குள் இருக்கும் அதிகார போராட்டங்களும் கட்சியின் ஒற்றுமையை பாதிக்கிறது என்பதை காட்டுகிறது.

அண்மைக்காலமாக அ.தி.மு.க.வின் பல நிகழ்வுகளில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் புறக்கணிக்கப்பட்டு, எடப்பாடி பழனிச்சாமியின் படம் மட்டுமே இடம்பெறுவது செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

செங்கோட்டையன், எப்போதும் தலைமைக்கு எதிராக நேரடியாக பேசாதவர். எம்.ஜி.ஆர். காலம் முதல் அ.தி.மு.க.வில் இருக்கிறார். ஆனால், இப்போது அவர் வெளிப்படையாக பேசி, கெடு விதித்தது, கட்சியின் கட்டுக்கோப்பு சிதறி கொண்டிருப்பதன் அறிகுறியாக கருதப்படுகிறது.

அ.தி.மு.க. இப்படி பிளவுபட்டு, உட்கட்சி பூசல்களுடன் தேர்தலைச் சந்தித்தால், அது ஒரு பெரிய தோல்வியில் முடிய வாய்ப்புள்ளது. ஒற்றுமையில்லாத அதிமுக, அண்ணாமலை தலைமை இல்லாத பாஜக மீண்டும் நோட்டாவுக்கு கீழ் செல்லவே வாய்ப்பு என அரசியக்ல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் வலுவான எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. பலவீனமடையும் பட்சத்தில், தி.மு.க.வை நேரடியாக எதிர்கொள்ளும் கட்சியாக விஜய்யின் த.வெ.க. உருவெடுக்கும் என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அ.தி.மு.க. பலவீனமடைவது பா.ஜ.க.விற்கு ஒரு வாய்ப்பாக அமையாது. மாறாக, அ.தி.மு.க.வில் ஏற்படும் பிளவுகள் பா.ஜ.க.வின் வாக்கு வங்கியையும் குறைத்து, அக்கட்சி ‘நோட்டாவிற்கும்’ கீழே செல்லும் நிலை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசியல் கணிப்புகள் அனைத்தும் செங்கோட்டையன் எடுத்த நிலைப்பாட்டினால் ஏற்பட்ட விவாதங்களின் விளைவே. அவரது இந்த கலகக்குரல், அ.தி.மு.க.வின் எதிர்காலத்தை எந்த திசையில் கொண்டு செல்லும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.