என்னது மகாபலி அசுரனா? ஓணம் பண்டிகையைக் கொண்டாடுறது இதுக்குத்தான்!

இன்று (5.9.2025) ஓணம் பண்டிகை. கேரளாவின் ஸ்பெஷல் பண்டிகைன்னா இதுதான். மகாபலிச்சக்கரவர்த்தி என்ற மன்னனின் நினைவாகத்தான் ஓணம் கொண்டாடப்படுகிறது. விஷ்ணு விஸ்வரூபம் எடுத்து உலகை 3 அடியாக அளந்தார் என்று சொல்லப்படுவதுதான் ஓணம். இதன்…

இன்று (5.9.2025) ஓணம் பண்டிகை. கேரளாவின் ஸ்பெஷல் பண்டிகைன்னா இதுதான். மகாபலிச்சக்கரவர்த்தி என்ற மன்னனின் நினைவாகத்தான் ஓணம் கொண்டாடப்படுகிறது. விஷ்ணு விஸ்வரூபம் எடுத்து உலகை 3 அடியாக அளந்தார் என்று சொல்லப்படுவதுதான் ஓணம். இதன் விலாவாரியான கதை என்னன்னு பார்க்கலாமா?

மகாபலிச்சக்கரவர்த்தி கீழநாடு என்று சொல்லப்படும் கேரளாவை ஆண்டு வந்தார். அவர் மக்களுக்கு எல்லாவித சிறப்புகளையும், பெருமைகளையும் செய்து வானளவு புகழ்ந்த ஒரு மன்னராக இருக்கிறார். அவர் மன்னனுடைய வம்சம் என்ற அளவில் அசுரனுடன் சேர்க்கப்படுகிறார். ஆனாலும் ரொம்பவே கொடைவள்ளலாக இருந்தார். அதாவது கர்ணன் மாதிரி. யாரும் கேட்டா இல்லைன்னே சொல்லமாட்டாராம். அதே நேரம் அசுர வம்சத்தைச் சார்ந்தவர் என்பதால் ரொம்பவே வலிமையானவர்.

இவருடைய வலிமையைக் கண்டு பயந்த பல கடவுள்கள் விஷ்ணுவிடம் முறையிடுகிறார்கள். விஷ்ணுவும் வாமன அவதாரம் எடுத்து இவரிடம் 3 அடிக்கு நிலம் கேட்கிறார். முதல் 2 அடிக்குத் தான் பெற்றது எல்லாவற்றையும் கொடுத்த மகாபலி 3வது அடிக்கு தன் தலையையேக் கொடுக்கிறார். ஆனால் அதுக்குப் பதிலா வருஷத்துக்கு ஒரு முறை கேரள தேசத்தைப் பார்த்துட்டுப் போக விஷ்ணுவிடம் அனுமதி கேட்கிறார்.

விஷ்ணுவும் சரின்னு சொல்ல மகாபலி தன்னோட கேரள தேசத்தை வருஷத்துக்கு ஒருமுறை பார்த்துட்டுப் போவாரு. அந்த நாள்தான் ஓணம் பண்டிகையாகக் கொண்டாடி வருகின்றனர். இந்தநாளில் ஸ்பெஷல் அத்தைப்பூ கோலம்தான். பூக்களால் வாசலில் வண்ணமயமாக அலங்கரித்துக் கோலம் இடுவர். தமிழகத்திலும் கல்லூரிகளில் மாணவிகள் இந்த அத்தைப்பூ கோலம் இடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.