அதிமுக பொதுச்செயலாளர் பதவியை தக்க வைக்க எடப்பாடி செய்யும் தவறுகள்.. ஈகோ பார்க்காமல் விஜய்யுடன் கூட்டணி வைப்பதே ஒரே வழி.. தவறான முடிவெடுத்தால் இதுவே கடைசி தேர்தலாக இருக்கும்.. யோசியுங்கள் ஈபிஎஸ்..!

நிரந்தரமான தலைமை இல்லாதது, உள் கட்சி மோதல்கள், மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவு ஆகிய காரணங்களால், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது ஒரு நிச்சயமற்ற நிலையில் உள்ளது.…

vijay eps

நிரந்தரமான தலைமை இல்லாதது, உள் கட்சி மோதல்கள், மற்றும் நடிகர்
விஜய்யின் அரசியல் நுழைவு ஆகிய காரணங்களால், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது ஒரு நிச்சயமற்ற நிலையில் உள்ளது. இந்த கூட்டணி அதன் உள்கட்சி பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் திணறுகிறது. இதற்கிடையில், தி.மு.க. தலைமையிலான ஆளும் கட்சிக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட முடியாமல், கூட்டணியின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான், முதலமைச்சர் வேட்பாளர் என்று பா.ஜ.க. தலைவர்களே வெளிப்படையாக அறிவித்தாலும், கூட்டணிக்குள் குழப்பங்கள் தொடர்கின்றன. குறிப்பாக, கூட்டணி கட்சிகள் எடப்பாடி பழனிசாமியை முழுமையாக ஏற்க தயங்குகின்றன.

தே.மு.தி.க. தலைவர் பிரேமலதா விஜயகாந்த், அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேபோல், டி.டி.வி. தினகரன், விஜய் பக்கம் மெல்ல மெல்ல சாய்கிறார். ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த பிளவுகள், அ.தி.மு.க. கூட்டணிக்கு பெரிய சவாலாக உள்ளன. ஒருவேளை இவர்கள் ஒன்றுசேர்ந்தால், தி.மு.க.வுக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். ஆனால் ஒன்று சேர்வதை எடப்பாடியே விரும்பவில்லை என தெரிகிறது என அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லாதது, தி.மு.க.வை எதிர்கொள்வதை கடினமாக்குகிறது. மேலும், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, எதிர்கட்சி வாக்குகளை பிரித்து, தி.மு.க.வின் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியை வலுப்படுத்துவதை விட, அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தி, தமிழக அரசியலில் தனக்கான ஒரு இடத்தை உருவாக்குவதிலேயே கவனம் செலுத்துவதாக தெரிகிறது என்ற சந்தேகமும் அரசியல் விமர்சகர்களுக்கு உள்ளது. கட்சியின் கவனம் தற்போது பீகார் மற்றும் பிற மாநில தேர்தல்களில் இருப்பதால், தமிழக அரசியல் குறித்த முழுமையான கவனம் அக்டோபர் மாதத்திற்கு பிறகுதான் இருக்கும்.

தமிழக எதிர்க்கட்சிகள், ஆளும் தி.மு.க. அரசுக்கு எதிராக செயல்பட தவறிவிட்டன. காவல்துறை இயக்குநர் நியமனம் போன்ற முக்கிய பிரச்சினைகளில் கூட, பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மௌனம் காத்தன. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மட்டுமே அந்த பிரச்சினை குறித்து பேசியது, எதிர்க்கட்சிகளின் பலவீனத்தை காட்டுகிறது [

ஒரு வலுவான எதிர்க்கட்சி இல்லாதது, தி.மு.க. அரசுக்கு ஒரு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் ஒரு நிலையான எதிர்க்கட்சி உருவாக வேண்டுமென்றால், அ.தி.மு.க. அதன் உட்கட்சி பிரச்சினைகளை தீர்த்து, தனது கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும். இல்லையென்றால் கெளரவம் பார்க்காமல் விஜய் கட்சியுடன் அவர் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு கூட்டணி அமைக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர் பதவியை தக்க வைக்க வேண்டும் என்ற கோணத்தில் மட்டும் சிந்தித்தால், கட்சியே அவர் கையை விட்டு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. எனவே ஈகோ பார்க்காமல், பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும், விஜய்யுடன் கூட்டணி அமைக்க வேண்டும், இதுமட்டுமே அதிமுக மீண்டெழ இருக்கும் ஒரே வாய்ப்பு எனவும் அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.