படுதோல்வின்னா என்னன்னு தெரியுமா டிரம்ப்.. இன்னும் கொஞ்ச நாளில் பார்ப்ப.. டிரம்புக்கு எதிராக உலகளாவிய ஒற்றுமை.. இந்தியா, சீனா, ரஷ்யா எடுக்கும் முக்கிய முடிவுகள்..

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய வரிவிதிப்புக்கு மத்தியில், உலகளாவிய தெற்கு நாடுகளின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்…

trump modi

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய வரிவிதிப்புக்கு மத்தியில், உலகளாவிய தெற்கு நாடுகளின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தனிப்பட்ட முறையில் வரவேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் தியான்ஜினில் நடைபெற உள்ள இந்த உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி, புதின் ஆகியோருடன் மத்திய ஆசியா, மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த பல தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டு காலவான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு, பிரதமர் மோடி சீனாவுக்கு செல்வது இதுவே முதல் முறை. இதற்கு முன்னர், 2024-இல் ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஜி ஜின்பிங்குடன் அவர் மேடையை பகிர்ந்து கொண்டார்.

‘தி சைனா-குளோபல் சவுத் ப்ராஜெக்ட்’ என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் எரிக் ஓலாண்டர் கூறுகையில், “அமெரிக்காவின் தலைமையிலான சர்வதேச ஒழுங்கு எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்த இந்த மாநாட்டை ஜி ஜின்பிங் பயன்படுத்திக்கொள்வார்” என்று தெரிவித்தார். ஜனவரி முதல் சீனா, ஈரான், ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கு எதிராக வெள்ளை மாளிகை எடுத்த முயற்சிகள் விரும்பிய விளைவை ஏற்படுத்தவில்லை என்பதை இந்த மாநாடு உணர்த்தும் என்றும் அவர் கூறினார்.

மேலும், “பிரிக்ஸ் அமைப்பு டொனால்ட் ட்ரம்ப்பை எந்த அளவுக்கு உலுக்கியுள்ளது என்பதை பாருங்கள். இது போன்ற அமைப்புகள் அதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த உச்சி மாநாடு, மிகவும் சக்திவாய்ந்த ஒரு காட்சிப்படுத்தலுக்கானது” என்றும் ஓலாண்டர் குறிப்பிட்டார். இந்த மாநாடு, ஒரு புதிய சர்வதேச உறவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் சீன வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.