விநாயகர் வழிபாட்டுக்கு அப்படி என்ன சிறப்பு? சதுர்த்திக்கான பூஜை நேரம் என்ன?

விநாயகர் சதுர்த்தியை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடி வருகிறோம். அன்றுதான் விநாயகர் பெருமான் அவதரித்த நாள். முழுமுதற்கடவுளான இவரைத் தரிசித்த பிறகுதான் எல்லா தெய்வங்களையும் கும்பிட வேண்டும்.…

விநாயகர் சதுர்த்தியை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடி வருகிறோம். அன்றுதான் விநாயகர் பெருமான் அவதரித்த நாள். முழுமுதற்கடவுளான இவரைத் தரிசித்த பிறகுதான் எல்லா தெய்வங்களையும் கும்பிட வேண்டும். இது சிவபெருமானால் விநாயகர் பெற்ற வரம். அதனால் எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் விநாயகர் பெருமானை வணங்கிவிட்டுத் தொடங்கினால் அந்த செயலில் தடை இருக்காது.

செய்யக்கூடிய செயலில் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும் பெரும்பலன் என்னன்னா காரியத்தடைகளை நீக்குவார், ஞானத்தைத் தருவார், செழிப்பான வாழ்க்கையைத் தருவார். செழிப்பான வாழ்க்கைன்னா செல்வம் மட்டும் கிடையாது.

நம்ம வாழ்க்கையில 16 செல்வங்கள்னு பெரியோர்கள் சொல்லிருக்காங்க. அவை எல்லாம் கிடைத்தால்தான் நம்ம வாழ்க்கை செழிப்பாக இருக்கும். பணம் மட்டும் இருந்து மனம் நிம்மதி இல்லன்னா நம்ம வாழ்க்கையில பணம் இருந்தும் பிரயோஜனம் கிடையாது.

அதே போல ஞானம் இருந்து அதற்கேற்ற உத்தியோகமோ, தொழிலோ அமையலன்னா அந்த வாழ்க்கை சிறப்பாக இருக்காது. அப்போ நமக்கு எல்லாமே சிறப்பாக இருக்கணும்னா நம்ம விக்னங்களைத் தீர்க்கக்கூடிய விநாயகரை நாம் வணங்க வேண்டும்.

இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 26ம் தேதி மதியம் 1.54 மணிக்கு வளர்பிறை சதுர்த்தி ஆரம்பித்து மறுநாள் பிற்பகல் 3.44மணி வரை உள்ளது. ஒருநாள் முழுவதும் சதுர்த்தி திதி இருந்தாலும் கூட பிள்ளையாரை வழிபட உள்ள நாள் எதுன்னா காலையில் பிரம்ம முகூர்த்த நேரமாகக் கருதப்படும்

அந்த நேரத்தில் பூஜை செய்து கொள்ளலாம். 27ம் தேதி பூஜை நேரம் 11.06மணி முதல் 1.40மணி வரை உள்ளது. அந்த நேரத்தில் விநாயகர் சதுர்த்திக்கான பூஜையை செய்து கொள்ளலாம். அன்று மாலை நேரத்தில் பூஜை செய்ய முடியாது. ஏன்னா சதுர்த்தி திதி பிற்பகல் 3.44 மணி வரைதான் உள்ளது.