ரிசர்வ் வங்கியின் ஒரே ஒரு அறிக்கை.. டாலர் மதிப்பு சரிவு.. ரூபாய் மதிப்பு உயர்வு.. இனி டாலரை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை. இந்தியாவின் அதிரடி..!

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த மோதலை “நாணயங்களின் போர்” என்று இந்தியா புத்திசாலித்தனமாக மாற்றிவிட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் பொருளாதாரம் “செத்துப் போய்விட்டது” என்று வெளிப்படையாக…

rupee vs dollar1

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பொருளாதார மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த மோதலை “நாணயங்களின் போர்” என்று இந்தியா புத்திசாலித்தனமாக மாற்றிவிட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் பொருளாதாரம் “செத்துப் போய்விட்டது” என்று வெளிப்படையாக விமர்சனம் செய்ததற்கு இந்தியாவின் பதிலடி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்ட சில முக்கிய நடவடிக்கைகள் தான் இந்த அதிரடிக்கு காரணம். ரிசர்வ் வங்கி ஒரு புதிய சுற்றறிக்கையில்ம் வங்கிகள் முன் அனுமதி இல்லாமல் சிறப்பு ரூபாய் வோஸ்ட்ரோ கணக்குகளை (Rupee Vostro accounts) நேரடியாக திறக்க அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த முடிவு, ரூபாய் வர்த்தகத்தை எளிதாக்குகிறது, டாலரின் தேவையை குறைக்கிறது, மேலும் இது டாலரின் ஆதிக்கத்திற்கு ஒரு நேரடி சவாலாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்க டாலர் கடந்த 52 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான ஆறு மாத காலத்தை சந்தித்துள்ளது, அதன் மதிப்பு 11% குறைந்துள்ளது. இதற்கு நேர்மாறாக, இந்திய ரூபாய் வலுப்பெற்றுள்ளது, இதன் காரணமாக அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளனர்.

மொத்தத்தில் இந்தியாவின் துடிப்பான பொருளாதார கொள்கைகள் மற்றும் புத்திசாலித்தனமான முடிவுகள் அமெரிக்காவின் அழுத்தத்தை எதிர்கொண்டது மட்டுமல்லாமல், உலக அரங்கில் இந்தியாவை ஒரு வலுவான மற்றும் நிலையான பொருளாதார சக்தியாக நிலைநிறுத்தியுள்ளன.