தலைப்பைப் பார்த்ததும் பயமாகத்தானே இருக்கிறது. பயப்படத் தேவையில்லை. பயம் வந்தால் வாழ்க்கையே பயமாகி விடும். எந்த ஒரு பிரச்சனையையும் துணிச்சலாகக் கையாளத் தெரிந்தால் பயம் என்பது காணாமல் ஓடிப்போய்விடும். அப்படித்தான் நம் உடல்நலப் பிரச்சனைகளும். உடல் சரியில்லன்னு சோர்ந்து விடாதீர்கள். அப்போதுதான் நிறைய வேலைகளைச் செய்ய வேண்டும். நம் உடலுக்குத் தகுந்த, மனதுக்குப் பிடித்த வேலைகளைச் செய்வது நல்லது. வாங்க தலைப்புக்குரிய விளக்கத்தைப் பார்க்கலாம்.
உப்பு அதிகமானால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. உப்பு அளவோடு பயன்படுத்தினால் உடலில் தேவையற்ற நுண்ணுயிரிகள் வளர்வதைக் கட்டுப்படுத்தி தேவையான நுண்ணுயிரிகள் வளர வழிவகுக்கிறது. உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவை வரக் காரணம் அதிகப்படியான உப்பு சேர்ப்பதுதான். வயிறு மற்றும் பெருங்குடல் புற்றுநோய், மெனியர் நோய், ஆஸ்டியோபோரோசிஸ், உடல் பருமன் வரக் காரணமும் உணவில் சேரும் இந்த அதிகப்படியான உப்பு தான்.
அதிகப்படியான உப்பை உணவில் குறைப்பது எப்படி என்ற கேள்வி எழலாம். உப்பு அதிகமாக உள்ள உணவைக் குறைத்தாலே போதும். உதாரணத்துக்கு கருவாடு, ஊறுகாய், உப்புக்கடலை போன்ற உணவுகளைச் சொல்லலாம். சோடாக்கள் மற்றும் சில ரொட்டி வகையிலும் உப்பு அதிகமாக உண்டு.
அதற்குப் பதிலாக குறைந்த சோடியம், சர்க்கரை, பொட்டாசியம், நார்ச்சத்துள்ள உணவுகளைச் சேருங்கள். பீன்ஸ், கொட்டை வகைகள், விதைகள், முழு தானியங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேருங்கள்.
புளித்த உணவுகள், கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். சீரான அளவில் உப்பை தினமும் சேர்க்க வேண்டும். ஆனால் நாம் தினமும் 5 கிராமை விட அதிக அளவில் உப்பைச் சேர்க்கிறோம். இது மிகப்பெரிய ஆபத்து என இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



