நமக்கு எப்பவுமே தலைமுடி கருகருன்னு அடர்த்தியா வளரணும்கற எண்ணம் இருக்கும். ஆனா என்ன செய்யணும்னு தெரியாது. அதுக்கான முயற்சிகளிலும் ஈடுபட மாட்டோம். ஏதோ வந்தோம். இருந்தோம். போனோம்னு தான் இருப்போம். மூளை வேலை செய்யாதுன்னு சொல்வாங்க. வேலை செய்யும். ஆனா சில நேரங்களில் சோம்பேறித்தனமாக மந்தமாக இருக்கும். ஆனா இந்த ரெண்டுக்கும் தேவை ஒரே ஒரு எண்ணை தான்;. வாங்க அது என்னன்னு பார்ப்போம்.
மூளையின் சுறுசுறுப்புக்கும், தலை முடி உதிர்வதைத் தடுப்பதற்கும் உதவுவது கடுகு எண்ணை. அது மிகவும் ஆரோக்கியம் தரக்கூடியது. அதில் பல மருத்துவக்குணங்கள் உள்ளன.
தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் பீட்டா கரோட்டின் என்ற ஊட்டசத்து கடுகு எண்ணையில் உள்ளது. இதுதான் தலைமுடி வேர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதைத் தேய்க்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. தலைமுடி வேர்களில் தேங்கியுள்ள நச்சுகளை நீக்குகிறது. கடுகு எண்ணையில் ஃபேட்டி ஆசிட் உள்ளது. அது மட்டுமல்லாமல் மூளையின் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஒமேகா 3 என்ற ஊட்டச்சத்தும் உள்ளது.
இதனால் மூளைக்குக் கூடுதல் பலத்தைத் தருகிறது. கடுகு எண்ணையை உணவில் சேர்க்கலாம். தலைக்கும் மசாஜ் செய்யலாம். ஆனால் ஒரு விஷயத்தை மறந்துடாதீங்க. கடுகு எண்ணையை அப்படியே அப்ளை பண்ணிடரீங்க. அது கூட அதுக்குச் சமமான அளவு தேங்காய் எண்ணையையும் கலந்து தலையில தேய்ச்சிக்கோங்க. அதுதான் குளிப்பதற்கு நல்லது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



