நீ பாட்டுக்கு பேச்சுவார்த்தை நடத்து.. நான் என் வேலையை பாக்குறேன்.. டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தையின்போது ரஷ்யாவை உக்கிரமாக தாக்கிய உக்ரைன்.. குடியிருப்பு பகுதியில் தாக்கியதால் ரஷ்யா அதிர்ச்சி..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையேயான மிக முக்கிய சந்திப்பு அலாஸ்காவில் நடைபெற்ற சந்திப்பில் எந்தவிதமான ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. ஆனால் இந்த சந்திப்புக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு,…

zelensky

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையேயான மிக முக்கிய சந்திப்பு அலாஸ்காவில் நடைபெற்ற சந்திப்பில் எந்தவிதமான ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. ஆனால் இந்த சந்திப்புக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, ரஷ்யாவின் எல்லை நகரான குர்ஸ்க் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று அதிகாலை நடந்த இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 12 பேர் காயமடைந்தனர். உக்ரைன் அதிபர் நீங்கள் என்ன பேச்சுவார்த்தை நடத்தினாலும் நான் அடங்க மாட்டேன் என்ற ரீதியில் இருப்பது இரு நாடுகளுக்கு இடையிலான பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ரஷ்யாவின் குர்ஸ்க் நகரின் தற்காலிக பிராந்திய ஆளுநரான அலெக்சாண்டர் கின்ஷடீன், இந்த தாக்குதல் ஒரு குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து நடத்தப்பட்டதாக தெரிவித்தார். இத்தாக்குதல் நடந்த அதே நேரத்தில், ரஷ்யப் படைகள் உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் ஊடுருவி பதிலடி கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டதுடன், கணிசமான அளவில் சொத்துக்களுக்கும் சேதம் அடைந்ததாகவும் குறிப்பாக ஒரு பள்ளி, ஒரு குழந்தைகள் மருத்துவமனை ஆகிய கட்டிடங்களில் சேதமடைந்ததாகவும் தெரிகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள பல வீடுகள் மற்றும் சமூக நல மையங்களுக்கும் பாதிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல்களில் 52 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் மூன்று குழந்தைகள் என்றும், நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ரஷ்யாவின் சிறப்புத் தூதர் ரோடியன் மிரோஷ்னிக் தெரிவித்தார். பெல்கோரோட், ரோஸ்டோவ் மற்றும் குர்ஸ்க் போன்ற நகரங்களில் வேண்டுமென்றே பொதுமக்கள் வசிக்கும் இடங்களை உக்ரைன் குறிவைப்பதாகவும், இது போர் விதிகளுக்கு எதிரானது என்றும் ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.