கோகுலாஷ்டமிக்கும், கிருஷ்ணஜெயந்திக்கும் என்ன வித்தியாசம்? எந்த நாளில் எது எப்போது வருகிறது?

கண்ணபரமாத்மா அவதாரம் செய்த அற்புதமான நாள் தான் கிருஷ்ண ஜெயந்தி. ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் வசுதேவருக்கும், தேவகிக்கும் எட்டாவது அவதாரமாக வந்து திருஅவதாரம் தந்தார். ஆவணி மாதம் வரணும். ரோகிணி நட்சத்திரமும் வரணும்.…

கண்ணபரமாத்மா அவதாரம் செய்த அற்புதமான நாள் தான் கிருஷ்ண ஜெயந்தி. ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் வசுதேவருக்கும், தேவகிக்கும் எட்டாவது அவதாரமாக வந்து திருஅவதாரம் தந்தார். ஆவணி மாதம் வரணும். ரோகிணி நட்சத்திரமும் வரணும். அஷ்டமி திதியும் வரணும். இது எல்லாமே சேர்ந்து வருவது ரொம்பவே அபூர்வம்.

சில ஆண்டுகள்ல ஆவணி மாதமே வராது. ஆடி மாதத்தின் கடைசி பகுதியிலேயே அஷ்டமி திதி வரும். ஆனா ரோகிணி நட்சத்திரம் வராது. அது ஆவணி மாதத்தில்தான் வரும். அப்படின்னா கிருஷ்ண ஜெயந்தி எந்த நாளில் கொண்டாடுவது? இந்த ஆண்டு அப்படி ஒரு சிறிய குழப்பம் இருக்கு.

கோகுலாஷ்டமி என்பது என்ன? கிருஷ்ணஜெயந்தி என்பது என்ன? ரெண்டுமே கண்ணனைத்தானே கும்பிடுறது… குழப்பமா இருக்குன்னு சொல்லலாம். ஒருவருடைய பிறந்தநாளை நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டாடப்படுவது. அவதார புருஷரான கிருஷ்ணபரமாத்மா ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்ததால அன்று தான் கிருஷ்ணஜெயந்தி.

பொதுவாக திதியைப் பார்த்து கிருஷ்ணரோட பிறந்தநாளைக் கொண்டாடணும்னா அதுக்கு பேரு கோகுலாஷ்டமின்னு பேரு. தமிழகக் கோவில்களில் கிருஷ்ணஜெயந்தியைத் தான் வெகுவிமரிசையாகக் கொண்டாடுவார்கள்.

ஆனால் கண்ணன் பிறந்து வாழ்ந்த வடநாட்டுப் பகுதியில் கோகுலாஷ்டமி தான் மிகப்பிரம்மாண்டமான விழாவாக அமைந்துள்ளது. கோகுலாஷ்டமி எல்லா இடங்களிலும் கொண்டாடப்படும் விழா. விரதம் இருந்து கண்ணனின் கால் தடம் போட்டு அவருக்குப் பிரியமான பொருள்களை எல்லாம் நைவேத்தியம் பண்ணி எங்க வீட்டுக்கு வான்னு அழைக்கக்கூடிய வழக்கம் இன்று வரை தொடர்கிறது.

ஆனால் ஒரு சிலர் ஸ்ரீஜெயந்தி என்று அழைக்கக்கூடிய கிருஷ்ணஜெயந்தியைத் தான் கிருஷ்ணருக்குப் பாதம் போட்டு அவருக்கு வேண்டிய பலகாரங்களைப் படைத்து வழிபடுகின்றனர். 16.8.2025 அதிகாலை 1.41 மணி முதல் இரவ 11.13 மணி வரை அஷ்டமி திதி வருகிறது. அன்று தான் கோகுலாஷ்டமி. 15.09.2025 அன்று தான் ஸ்ரீஜெயந்தி எனப்படும் கிருஷ்ணஜெயந்தி வருகிறது.

14.9.2025 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.16 மணிக்கு அஷ்டமி திதி வருகிறது. 14.9.2025 அன்று ரோகிணி நட்சத்திரம் பிற்பகல் 1.17 மணி வரை உள்ளது. அன்று அஷ்டமி திதியுடன் ரோகிணி நட்சத்திரமும் சேர்ந்து வருகிறது. காலை 10.30 மணி முதல் 11.45 மணி வரை வழிபாடு செய்யலாம். 15.9.2025 அன்று பாஞ்சராத்ர ஜெயந்தி ஆலயங்களில் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.

16ம் தேதியும் இதன் கொண்டாட்டம் பல இடங்களில் தொடர்கிறது. 16.8.2025 அன்று முழுவதும் அஷ்டமி உள்ளது. சனிக்கிழமையான அன்று காலை 10.30 மணி முதல் 11.50 மணி வரை வழிபாடு செய்யலாம். மாலை 6 மணிக்கு மேல் வழிபாடு செய்து கொள்ளலாம்.