பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா செளக்கியமா? அமெரிக்காவில் வீராவேசமாக பேசிய அசிம் முநீர்.. 2 நாள் போர் செய்ய வக்கில்லை.. உலகத்தில் பாதியை அழிப்பாராம்..

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், அமெரிக்காவில் நிகழ்த்திய வீராவேசமான உரை, சமூக ஊடகங்களில் பெரும் கேலியையும் கிண்டலையும் கிளப்பியுள்ளது. இந்தியாவுடன் போரிட்டால் உலகத்தில் பாதியை அழித்துவிடுவோம் என்று அவர் பேசியது, நெட்டிசன்களால் கேலிக்குள்ளாகியுள்ளது.…

asif munir

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், அமெரிக்காவில் நிகழ்த்திய வீராவேசமான உரை, சமூக ஊடகங்களில் பெரும் கேலியையும் கிண்டலையும் கிளப்பியுள்ளது. இந்தியாவுடன் போரிட்டால் உலகத்தில் பாதியை அழித்துவிடுவோம் என்று அவர் பேசியது, நெட்டிசன்களால் கேலிக்குள்ளாகியுள்ளது.

முட்டாள்தனமான அச்சுறுத்தலும், எதார்த்தமற்ற போர்க் கனவும்

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், அமெரிக்காவில் உள்ள ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில், “இந்தியாவுடன் போர் ஏற்பட்டு நாங்கள் தோற்பது போல் இருந்தால் உலகத்தில் பாதியை அழிப்போம்” என்று பேசியதாக கூறப்படுகிறது. அவரது இந்த பேச்சு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை, உலகப் போராக மாற்றிவிடுவோம் என்ற ஒரு முட்டாள்தனமான அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

“இரண்டு நாள் போர் செய்ய வக்கில்லை” – நெட்டிசன்களின் விமர்சனம்

அசிம் முனீரின் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களும், கிண்டல்களும் குவிந்து வருகின்றன. ஒரு சில நெட்டிசன்கள், “இந்தியாவுடன் இரண்டு நாட்கள்கூட தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான், உலகத்தின் பாதியை அழிப்போம் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது,” என்று விமர்சித்துள்ளனர். சிலர், “பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா செளக்கியமா?” என்ற பழமொழியைப் பயன்படுத்தி, அமெரிக்காவில் இருந்து கொண்டு பேசும் முநீர், இதை பாகிஸ்தானில் இருந்து பேச முடியுமா? என இந்த விவகாரத்தைக் கிண்டல் செய்துள்ளனர்.

மேலும் இந்தியா சிந்து நதியில் அணை கட்டினால், அந்த அணையை 10 அணுகுண்டுகள் போட்டு அழிப்போம். என்று கூறியுள்ளார். இந்தியா கட்டும் அணையை அழித்தால், அதில் உள்ள தண்ணீர் பள்ளத்தில் இருக்கும் பாகிஸ்தானுக்கு தானே வரும். அப்போது பாகிஸ்தான் நகர மக்கள்தானே அழிவார்கள். இந்த அடிப்படை புவியியல் அறிவு கூட இல்லாத ஒருவர் எப்படி ராணுவத் தளபதி ஆனார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்துவதில்லை என்ற இந்தியாவின் கொள்கை, உலக நாடுகளின் பாராட்டுகளைப் பெற்றுள்ள நிலையில், பாகிஸ்தானின் இதுபோன்ற அச்சுறுத்தல் பேச்சுகள், அதன் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.