அமெரிக்காவில் நடக்கும் அதானி மீதான மோசடி வழக்கு.. இந்திய அதிகாரிகள் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டு.. நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் மீதான மோசடி வழக்கு, அமெரிக்க நீதிமன்றத்தில் தாமதமாகி வருகிறது. இந்த தாமதத்திற்கு, இந்திய அதிகாரிகள் சம்மன்களை முறையாக வழங்காததே காரணம் என்று அமெரிக்க பத்திரங்கள்…

கவுதம் அதானி

இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் மீதான மோசடி வழக்கு, அமெரிக்க நீதிமன்றத்தில் தாமதமாகி வருகிறது. இந்த தாமதத்திற்கு, இந்திய அதிகாரிகள் சம்மன்களை முறையாக வழங்காததே காரணம் என்று அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம், நியூயார்க் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், கௌதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி உட்பட அதானி குழுமத்தை சேர்ந்தவர்கள் மீது பத்திரச் சட்டம் மீறல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அதானி குழுமம், இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் ரூ.265 கோடி லஞ்சம் கொடுத்து சூரிய மின்சக்தி திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை பெற்றதாகவும், இந்த உண்மைகளை அமெரிக்க முதலீட்டாளர்களிடமிருந்து மறைத்ததாகவும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

விசாரணையில் தாமதம் ஏன்?

அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம், இந்த வழக்கை விரைவுபடுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், இந்தியாவுக்கு சம்மன் அனுப்பும் நடைமுறைகள் காரணமாக விசாரணை முடங்கியுள்ளது.

சம்மன் வழங்காத இந்திய அரசு:

அமெரிக்க அரசு, கடந்த பிப்ரவரி மாதம் இந்திய சட்ட அமைச்சகத்திடம், அதானிக்கு சம்மன் வழங்க கோரி கோரிக்கை விடுத்தது. ஆனால், ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை இந்திய அதிகாரிகள் சம்மனை இன்னும் வழங்கவில்லை என்று அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதற்கு இந்திய அதிகாரிகள் என்ன விளக்கம் அளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.