ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் குறைந்த விலையில் இறக்குமதி: இந்தியாவுக்கு லாபம், இந்திய மக்களுக்கு என்ன பயன்?

ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தபோது, இந்தியா மட்டும் ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கியது. இந்த முடிவுக்கு பின்னால், பல பொருளாதார காரணங்கள் இருந்தன.…

crudeoil

ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தபோது, இந்தியா மட்டும் ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கியது. இந்த முடிவுக்கு பின்னால், பல பொருளாதார காரணங்கள் இருந்தன. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் தேவை அதிகரித்து, அதன் விலை உயரும். இதனால் அனைத்து நாடுகளுமே பாதிக்கப்படும். இந்த சிக்கலைத் தவிர்க்கவே, உலக நாடுகள் இந்தியாவின் இந்த முடிவை கண்டுகொள்ளவில்லை.

குறைந்த விலையில் கச்சா எண்ணெய்:

ரஷ்யா இந்தியாவின் நட்பு நாடு என்பதால், ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைத்தது. இதனால் இந்தியாவுக்கு நல்ல லாபம் கிடைத்தது.

சுத்திகரிப்பு மற்றும் விற்பனை:

இந்தியா, குறைந்த விலையில் வாங்கிய கச்சா எண்ணெயைப் பெட்ரோல் மற்றும் டீசலாக சுத்திகரித்து, உலகச் சந்தை விலைக்கு விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த வர்த்தகம் தொடர்ந்து நடந்து வருகிறது.

மக்களுக்குப் பயன் இல்லை:

குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கப்பட்டாலும், அதன் பலன் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. உலக சந்தை விலைக்கு சமமாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் லாபம்

இந்த லாபம் முழுவதும் தனியார் சுத்திகரிப்பு ஆலை உரிமையாளர்களுக்கும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வரியாகவும் செல்கிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. மத்திய அரசு மட்டுமின்றி, மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீது விதிக்கும் வரிகள் இதற்கு ஒரு காரணம். இதனால், கச்சா எண்ணெய் குறைந்த விலையில் கிடைப்பதன் பலன் பொதுமக்களுக்கு போய் சேரவில்லை.

ஏற்றுமதியாளர்களின் கவலை

டிரம்ப் விதித்துள்ள 50% வரி காரணமாக, ஏற்றுமதியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் சுத்திகரிப்பு ஆலை உரிமையாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், கச்சா எண்ணெய்க்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லாத நிலையில், வர்த்தக வரியால் தாங்கள் பாதிக்கப்படுவது ஏன் என்று ஏற்றுமதியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஏற்றுமதியாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டால் அதன் பாதிப்பு அவர்களிடம் வேலை செய்யும் சாதாரண பொதுமக்களுக்கும் ஏற்படும். எனவே இந்த சிக்கலுக்கு மத்திய அரசு உடனடியாகத் தீர்வு காணாவிட்டால், மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.