3500 ஆண்டுகளுக்கு முன்பே கர்ப்ப பரிசோதனை செய்த பெண்கள்.. வயிற்றில் உள்ள குழந்தை என்ன பாலினம் என்பதையும் கண்டுபிடித்தனர்.. ஒரு ஆச்சரியமான வீடியோ..

இன்றைய நவீன காலத்தில், கர்ப்ப பரிசோதனை என்பது மிக எளிதானது. ஒரு சிறிய பரிசோதனை கருவி, சில துளிகள் சிறுநீர், மற்றும் சில நிமிடங்கள் காத்திருப்பு இவையே போதுமானவை. ஆனால், நவீன தொழில்நுட்பங்கள் இல்லாத…

pregnant1

இன்றைய நவீன காலத்தில், கர்ப்ப பரிசோதனை என்பது மிக எளிதானது. ஒரு சிறிய பரிசோதனை கருவி, சில துளிகள் சிறுநீர், மற்றும் சில நிமிடங்கள் காத்திருப்பு இவையே போதுமானவை. ஆனால், நவீன தொழில்நுட்பங்கள் இல்லாத அந்த காலத்தில், பெண்கள் கர்ப்பத்தை கண்டறிய தங்களுக்கென சில தனித்துவமான, புத்திசாலித்தனமான முறைகளை பயன்படுத்தினர். அவற்றில் ஒன்றுதான் தானிய பைகளை பயன்படுத்தும் முறை.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு வைரலான பதிவு, பண்டைய எகிப்தில், கி.மு 1350ல் பயன்படுத்தப்பட்ட ஒரு சுவாரஸ்யமான நுட்பத்தை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, அந்த காலத்து பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா என்பதை அறிய, பார்லி மற்றும் கோதுமை விதைகள் கொண்ட பைகளில் சிறுநீர் கழித்தனர்.

அந்தப் பைகள் பல நாட்கள் கவனிக்கப்பட்டன. அந்த பைகளில் ஏதேனும் ஒன்று முளைத்தால், அந்த பெண் கர்ப்பமாக இருப்பதாக கருதப்பட்டது. பார்லி பை முளைத்தால், அது ஆண் குழந்தையை குறிப்பதாகவும், கோதுமை பை முளைத்தால், அது பெண் குழந்தையை குறிப்பதாகவும் நம்பப்பட்டது. ஒருவேளை இரண்டு பைகளும் முளைக்கவில்லை என்றால், கர்ப்பம் இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.

நம்பகமான கர்ப்ப பரிசோதனையா?

இந்த நுட்பம், அந்த காலத்தில் மிகவும் நம்பகமான கர்ப்ப பரிசோதனை முறைகளில் ஒன்றாக கருதப்பட்டது. சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில், இந்த முறை கர்ப்பத்தைக் கண்டறிந்தது மட்டுமல்லாமல், குழந்தையின் பாலினத்தையும் கணித்தது என்று கூறப்பட்டுள்ளது. இது நவீன சோதனைகள் ஆரம்பத்தில் சட்டப்பூர்வமாக வெளியிட தயங்கும் ஒரு தகவலாகும்.

இந்த வைரல் பதிவில், நவீன விஞ்ஞானிகள் இந்த முறையை ஆய்வு செய்ததாகவும், கர்ப்பத்தை கண்டறிவதற்கு இது ஆச்சரியப்படும் வகையில் பயனுள்ளதாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, பண்டைய நாகரிகங்களின் கண்டுபிடிப்புத் திறனை பார்த்து பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 1963ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கர்ப்பிணி பெண்ணின் சிறுநீரில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் விதைகளின் முளைப்பை உண்மையில் பாதிக்கலாம் என்று கண்டறியப்பட்டது.

ஆயினும், பாலினத்தை கணிக்கும் முறையின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாகவே உள்ளது. ஆண் கருவை காட்ட பார்லியும், பெண் கருவை காட்ட கோதுமையும் வேறுபட்ட விதத்தில் செயல்படும் என்பதற்கு உறுதியான அறிவியல் ஆதாரம் இல்லை.

இன்றைய மருத்துவ கருவிகள் இல்லாத ஒரு நாகரிகம், இதுபோன்ற ஒரு முறையை எப்படி உருவாக்கியது என்பது இன்னும் வியப்புக்குரியதாகவே உள்ளது. இந்த நடைமுறை பற்றிய குறிப்புகள், பண்டைய எகிப்திய மருத்துவ நூல்களில், குறிப்பாக, அறியப்பட்ட மருத்துவப் பதிவுகளில் ஒன்றான ‘எபெர்ஸ் பாப்பிரஸ்’ (Ebers Papyrus) என்னும் நூலில் காணப்படுகின்றன. அதில் சுகாதாரம், சிகிச்சை முறைகள், மற்றும் கர்ப்பம் கண்டறிதல் பற்றிய விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

https://www.instagram.com/reel/DKEcRQzy5Dm/