சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ‘நிர்பயா’ திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகள்!

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலனை உறுதிசெய்யும் வகையில், ‘நிர்பயா’ திட்டத்தின் கீழ் பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுமார் ரூ.23.66 கோடி மதிப்பீட்டில், பள்ளிகளில் நவீன கழிப்பறைகள்,…

nirbhaya

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலனை உறுதிசெய்யும் வகையில், ‘நிர்பயா’ திட்டத்தின் கீழ் பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுமார் ரூ.23.66 கோடி மதிப்பீட்டில், பள்ளிகளில் நவீன கழிப்பறைகள், கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பான விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்.. சுகாதார மேம்பாடு (ரூ.23.66 கோடி):

132 சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் நலன் கருதி, நவீன கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

159 பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், பயன்படுத்திய நாப்கின்களைப் பாதுகாப்பாக அகற்றும் சாதனங்கள் (sanitary napkin incinerators) அமைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு வசதிகள் (ரூ.5.47 கோடி):

மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 159 பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம், பள்ளியின் வளாகத்திற்குள் நடைபெறும் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாகக் கண்டறியவும் முடியும்.

விளையாட்டு மைதானங்கள் (ரூ.6.91 கோடி):

93 பள்ளிகளில் மாணவிகள் உடல் திறனை மேம்படுத்தவும், பல்வேறு போட்டிகளில் பாதுகாப்பாகப் பங்கேற்கவும், விளையாட்டுத் திடல்கள் மற்றும் மைதானங்கள் மேம்படுத்தப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வசதிகள் மூலம், பெண் குழந்தைகள் பயமில்லாமல் பள்ளிகளுக்கு செல்லவும், ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் கல்வி கற்கவும் தேவையான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. ‘நிர்பயா’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த சீரமைப்புப் பணிகள், மாணவிகளுக்கு நல்லதொரு கல்விச்சூழலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.