அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.. விஜய்யுடன் கூட்டணி.. 117+117ல் போட்டி.. யார் அதிக தொகுதியில் வெல்கிறாரோ அவர் தான் முதல்வர்? வித்தியாசமான டீல்  செய்த ஈபிஎஸ்..!

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி உருவாகி பல மாதங்கள் ஆகியும், வேறு எந்த கட்சியும் இந்த கூட்டணியில் இணைய முன்வரவில்லை. பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.…

vijay eps 1

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி உருவாகி பல மாதங்கள் ஆகியும், வேறு எந்த கட்சியும் இந்த கூட்டணியில் இணைய முன்வரவில்லை. பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த சூழலில், அ.தி.மு.க.வின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. கட்சியை தேர்தலிலும், ஆட்சியிலும் தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி, ஒரு அதிரடியான முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அ.தி.மு.க.வின் அதிரடி முடிவு.. விஜய்யுடன் கூட்டணி:

எடப்பாடி பழனிசாமி, நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்துடன்’ கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

117+117 திட்டம்:

இந்தக் கூட்டணியில், அ.தி.மு.க.வும், தமிழக வெற்றிக் கழகமும் தலா 117 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் பதவிக்கான டீல்:

இந்த கூட்டணியில், எந்த கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறுகிறதோ, அந்த கட்சியின் தலைவர் முதலமைச்சர் ஆவது என்றும், மற்றொரு கட்சியின் தலைவர் துணை முதலமைச்சர் ஆவது என்றும் ரகசிய ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டணியின் பின்னணி.. வேறு வழியின்றி…

பா.ஜ.க. கூட்டணியில் உள்ளதால், தன்னுடன் இணைய முடியாது என்று விஜய் திட்டவட்டமாக தெரிவித்ததாலேயே, எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வை கைவிட்டு, விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.

தி.மு.க.வை வீழ்த்துவது நோக்கம்:

அ.தி.மு.க.வும் விஜய்யின் கட்சியும் கூட்டணி அமைத்தால், தி.மு.க.வின் வெற்றி வாய்ப்புகள் குறையும் என்று அரசியல் விமர்சகர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தனர். இதை உணர்ந்தே எடப்பாடி பழனிசாமி இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

அடுத்தக்கட்ட எதிர்பார்ப்புகள்.. மதுரை மாநாட்டில் அறிவிப்பு?

மதுரை மாநாட்டில், இந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் வெளியிடுவாரா? முதல்வர் பதவி குறித்த இந்த ‘ரகசிய டீல்’ உண்மையாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.