பெண்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட டேட்டிங் செயலியில் பெரும் சிக்கல்.. ஏண்டா சேர்ந்தோம்ன்னு வருத்தப்படும் பெண்கள்.. அப்படி என்ன நடந்தது?

பெண்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட ‘Tea’ டேட்டிங் செயலியில் இருந்து லட்சக்கணக்கான பெண்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், செயலியின்உறுப்பினர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த செயலில் ஏண்டா உறுப்பினர்களாக சேர்ந்தொம்…

tea

பெண்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட ‘Tea’ டேட்டிங் செயலியில் இருந்து லட்சக்கணக்கான பெண்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், செயலியின்உறுப்பினர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த செயலில் ஏண்டா உறுப்பினர்களாக சேர்ந்தொம் என்று பெண்கள் வருத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தரவு மீறல் மற்றும் கசிந்த ஆவணங்கள்:

பெண்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட ‘Tea’ செயலியில் உறுப்பினராக சேர, அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள ஆவணங்களை பெண்கள் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், உண்மையான செல்ஃபி புகைப்படங்களையும் பதிவேற்ற வேண்டும். தற்போது இந்த பதிவேற்றப்பட்ட தரவுகளில்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ 72,000க்கும் மேற்பட்ட செல்ஃபி புகைப்படங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள ஆவணங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தத் தகவலை ‘Tea’ செயலியின் நிர்வாகத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர். பழைய தரவு சேமிப்பு அமைப்பில் இருந்த குறைபாடுகளே இந்தப் பிரச்சனைக்கு காரணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, செயலியில் உள்ள பெண்களின் ஆயிரக்கணக்கான செல்ஃபிகள் திருடப்பட்டுள்ளன. இதில் சில பெண்களின் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அரசு ஆவணங்களும் அடங்கும் என்றும் கூறப்படுகிறது.. கிட்டத்தட்ட 59,000 சுயவிவரப் புகைப்படங்களும் பெரிய அளவில் கசிந்துள்ளன.

தனியுரிமை அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கை:

கசிந்த இந்ச் செல்ஃபி புகைப்படங்கள் வெவ்வேறு தளங்களில் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது, பெண்களின் தனிப்பட்ட தனியுரிமைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. முதல் கட்ட விசாரணையில், ‘Tea’ செயலியில் உள்ள பெண்களை கண்டறியும் நோக்கத்துடன், சில ஆண்கள் பெண்கள் போல சமூக ஊடகத்தில் ஊடுருவி, தரவை திருடி பழிவாங்கும் நோக்குடன் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் பெண்களுக்கான எச்சரிக்கை:

இந்த விவகாரம் குறித்து ‘Tea’ செயலி நிர்வாகம் விசாரணை தொடங்கியுள்ளது. கிளவுட் அமைப்புகள் சரியாக பாதுகாக்கப்படாவிட்டால் மேலும் பல பிரச்சனைகள் ஏற்படும் என்பதால், உடனடியாக போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது.

ஒரு சமூக வலைதளத்தில் இணைவதற்காக அரசு கொடுத்த ஆவணங்களை பதிவேற்றுவதும், உண்மையான செல்ஃபி புகைப்படங்களை பதிவேற்றுவதும் பெண்களுக்கு எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதை இந்த ஒரு சம்பவம் உணர்த்தியுள்ளது. எனவே, பெண்கள் சமூக வலைதளங்களில் இணையும்போது கூடுமானவரை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், தங்கள் அசல் அடையாள ஆவணங்களை முடிந்தவரை பதிவேற்றாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.