சிவக்குமார் ஒரு மகா எம்டன்… சிவாஜி ஏன் அப்படி சொன்னாரு?

நடிகர் சிவக்குமார் 80களில் தமிழ்த்திரை உலகில் தனி முத்திரை பதித்தவர். சிறந்த எழுத்தாளர். ஓவியர். பேச்சாளர் என பன்முகத்திறன் கொண்டவர். இவர் நடித்த முதல் படம் எது? சிவாஜி இவரைப் பற்றி என்ன சொன்னார்?…

நடிகர் சிவக்குமார் 80களில் தமிழ்த்திரை உலகில் தனி முத்திரை பதித்தவர். சிறந்த எழுத்தாளர். ஓவியர். பேச்சாளர் என பன்முகத்திறன் கொண்டவர். இவர் நடித்த முதல் படம் எது? சிவாஜி இவரைப் பற்றி என்ன சொன்னார்? வாங்க பார்க்கலாம்.

இவன் இருக்கானே இவன் மகா எம்டன். நம்ம பக்கம்தான் இருக்கான்னு நம்ம நினைச்சிக்கிட்டே இருப்போம். எம்ஜிஆர் பக்கம் போயிடுவான். எம்ஜிஆர் பக்கம் போயிட்டானான்னு கேட்டு முடிக்கிறதுக்குள்ள நம்ம பக்கம் வந்துடுவான். அங்கே தலையைக் காட்டுவான். இங்கே வாலைக் காட்டுவான்.

பயலைப் புடிக்கவே முடியாது. ஆனா மகாபுத்திசாலி. இவனுக்கு எதிரியே கிடையாது. அதனால இவன் எப்பவும் நல்லாத்தான் இருப்பான்னு நடிகர் திலகத்தால பாராட்டப்பட்ட ஒரு நடிகர் சிவக்குமார்.

அப்பேர்ப்பட்ட சிவக்குமார் நடித்த முதல் திரைப்படம் ஏவிஎம். நிறுவனத்தின் காக்கும் கரங்கள்னு தான் பலரும் நினைப்பாங்க. ஆனால் உண்மை அதுவல்ல. அவர் நடித்த முதல் திரைப்படம் சித்ரா பௌர்ணமி. எஸ்எஸ்ஆர். தான் ஹீரோ. அந்தப் படத்திலே வில்லன் வேடம் ஏற்று சிவக்குமார் நடித்து இருந்தார்.

ஒரு சில காரணங்களால் அந்தப் படம் வளரல. தயாரித்தவர் அவரது நெருங்கிய உறவினர் ரத்னம். இந்தப் படத்தை இயக்கி வந்த கிருஷ்ணன் பஞ்சு தான் சிவக்குமாரை ஏவிஎம் நிறுவனத்துக்கு அறிமுகப்படுத்தினார். அதன் காரணமாகத்தான் காக்கும் கரங்கள் படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு சிவக்குமாருக்கு அமைந்தது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.