‘முடியாது என்பது முட்டாள்களின் வார்த்தை. அதை என் அகராதியில் இருந்தே நீக்கி விட்டேன்’ என்பார் மாவீரன் நெப்போலியன். அப்படி ஒரு வார்த்தையால் தான் நாம் தன்னம்பிக்கையை இழந்து தவிக்கிறோம். நம் இலக்கைத் தொடும் வரை விடாமல் முயற்சி செய்ய வேண்டும். வாழ்க்கையின் இலக்கை அடையும் வரை போராட வேண்டும். உன்னால் முடியாதது எதுவும் இல்லை என்று தன்னம்பிக்கையோடு செயல்படு.
உதறிய உறவையும் உதவிய மனிதரையும் என்றைக்கும் மறவாதீர். உதவாதவ ருக்கு பாடமாகவும் உதவியவருக்கு பலமாகவும் இருங்கள். நம்மால் இனி என்ன செய்ய முடியும் என்பதைக் கொண்டு நம்மை நாம் எடை போடுகிறோம். நாம் இதுவரை செய்து முடித்த விஷயங்களை வைத்துப் பிறர் நம்மை எடை போடுகிறார்கள்.
நீங்கள் யாரை நம்புகிறீர்கள் என்பதில் மிகவும் கவனமாக இருங்கள். துரோகம் எப்போதும் நம்பியவர்களிடம் இருந்து தான் வரும். உண்மை என்பது வேறு ஒன்றும் அல்ல. நீங்கள் நம்பிய விஷயத்தை மற்றவர்களும் நம்ப வேண்டும் எனும் உங்களின் எதிர்பார்ப்புத்தான் உண்மை.
தேடிச்சென்று தன் மதிப்பை உணர்த்த வேண்டிய அவசியமில்லை. தெருவில் விற்கும் அளவிற்கு தங்கத்தின் தரம் ஒருபோதும் குறையாது. நீங்கள் அனைத்தையும் விட பணத்தை அதிகமாக விரும்புவீரே ஆனால், உங்கள் வாழ்நாள் முழுவதும் வாங்கப்பட்டு, விற்கப்பட்டு கொண்டிருப்பீர்கள்.
சோர்வு அடையும் நேரம் களைத்து விடாதீர், அது உங்களுக்கானத் தேர்வு. தீர்வு கிடைக்கும் வரை அயராது உழைத்திடுங்கள். முடியாது என்பது உங்கள் சிந்தையின் பிழை, சிந்தனையை மாற்றுங்கள்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


