ஒரு ஆண்டில் மாதம் முழுக்க நாம் வழிபாடு செய்யணும்னா அது ஆடி மாதம்தான். முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை தினமும் ஒரு வழிபாடு வந்துகிட்டேதான் இருக்கும். அதனால்தான் இந்த மாதத்தைத் திருவிழா காலம் என்கின்றனர். 17.7.2025 வியாழக்கிழமை அன்று இந்த ஆண்டு ஆடிமாதம் பிறக்கிறது.
குருபகவானின் அருளைப் பெறக்கூடிய நாள். அம்பிகையின் வழிபாட்டைத் துவங்க அற்புதமான நாள். ஆடி 1 என்றால் முதல் நாளே வீடெல்லாம் சுத்தம் பண்ணுவோம். வாசலில் மாவிலைத் தோரணம், வேப்பிலைக் கட்டி வாசல் நிலையில் சந்தன குங்குமம் வைக்க வேண்டும். அப்படித்தான் அம்பாளை வீட்டுக்கு அழைக்க வேண்டும். முதல் நாளிலேயே அப்படி அழைத்தாள் மாதம் முழுவதும் வீட்டில் இருந்து அம்பாள் அருள்புரிவாள்.
கலசம் வைத்து அம்பாளை அழைக்க முடியும்னா செய்யுங்க. இல்லன்னா எளிய முறையில் அம்பாளை அழைக்கலாம். காலையில் எழுந்து குளித்ததும் நமது குலதெய்வத்தை முதலில் வழிபட வேண்டும். எல்லா சாமி படங்களுக்கும் பூ போடுங்க. சின்ன கலசத்துல மஞ்சள் கலந்த நீர், அதுல கொஞ்சம் வேப்பிலை, பூ போடுங்க. உங்க குலதெய்வத்தை முதலில் வழிபடுங்க. எந்த இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலும் முதலில் குலதெய்வத்தை பிரார்த்தனை பண்ணுங்க.
அதன் அனுமதி கிடைத்தால்தான் பிற தெய்வங்களை அழைக்க முடியும். நாங்க சின்னதா ஏதாவது தப்பு செய்தாலும் அதை எல்லாம் பெரிசாக நினைக்காம நீ எங்களுக்கு அருள்புரியணும்னு உள்ளன்போடு பிரார்த்தனை செய்ய வேண்டும். சர்க்கரைப்பொங்கல், பாயசம் என ஏதாவது ஒரு நைவேத்தியம் வைத்து காலையிலேயே வழிபடலாம். காலையில் நேரம் இருந்தால் பக்கத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று அபிஷேகத்துக்குப் பால் வாங்கிக் கொடுக்கலாம்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



