வெளியே வா.. வெளியே வான்னு சொன்னீங்களே.. வெளியே வந்தா தாங்குவீங்களா? சாரிமா மாடல் அரசு.. திமுக அரசை கலாய்த்த விஜய்..!

விஜய் வேலையே வந்து அரசியல் செய்ய மாட்டேன் என்கிறார், மக்களுக்காக போராட்டம் நடத்தவில்லை என்று அரசியல் நிபுணர்கள் என்ற பெயரில் திமுகவின் ஆதரவாளர்கள் விமர்சனம் செய்து வந்த நிலையில் இன்று அஜித்குமார் மரணத்திற்கு நீதி…

vijay 1

விஜய் வேலையே வந்து அரசியல் செய்ய மாட்டேன் என்கிறார், மக்களுக்காக போராட்டம் நடத்தவில்லை என்று அரசியல் நிபுணர்கள் என்ற பெயரில் திமுகவின் ஆதரவாளர்கள் விமர்சனம் செய்து வந்த நிலையில் இன்று அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடந்த போராட்டத்தில் விஜய் கலந்து கொண்டார். சுட்டெரிக்கும் வெயிலிலும் ஏராளமான பொதுமக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் விஜய் பேசியதாவது:

திருப்புவனம் மடப்புரத்தை சேர்ந்த அஜித் குமார் என்ற சாதாரண இளைஞரின் குடும்பத்திற்கு நடந்த கொடுமைக்கு, முதல்வர் அவர்கள் ‘சாரி’ சொன்னார்கள். அது தப்பு இல்லை. ஆனால், “முதலமைச்சர் அவர்களே, உங்களுடைய ஆட்சி காலத்தில் இதேபோல் போலீஸ் விசாரணையில் 24 பேர் இறந்து போயிருக்கிறார்கள். அந்த 24 பேரின் குடும்பங்களுக்கும் நீங்கள் ‘சாரி’ சொன்னீர்களா? தயவு செய்து ‘சாரி’ சொல்லி இருங்கள். அஜித் குமார் அவர்கள் குடும்பத்திற்கு நீங்கள் கொடுத்த நிவாரணம் போல், இந்த 24 பேர் குடும்பத்திற்கும் நீங்கள் நிவாரணம் கொடுத்தீர்களா? தயவு செய்து அந்த நிவாரணத்தையும் கொடுத்து விடுங்கள்.

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டபோது, ‘இது தமிழ்நாட்டின் அவமானம்’ என்று நீங்கள் தான் சொன்னீர்கள். இன்றைக்கு நீங்கள் உத்தரவிட்டதுக்கு பேர் என்னங்க சார்? அதேதானே? அன்னைக்கு நீங்கள் சொன்னதும், இன்னைக்கு நடப்பதும் அதே சி.பி.ஐ. தானே? அதே சி.பி.ஐ., ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வின் கைக்கூலிதானே? ஏன் நீங்கள் அங்கே போய் ஒளிந்துகொள்கிறீர்கள்?” ஏனென்றால் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். “அதனால், அந்த பயத்தில் நீங்கள் ஒன்றிய அரசின் ஆட்சிக்குப் பின்னால் ஒளிந்துகொள்வதற்கு காரணம்.

இன்னும் உங்களுடைய ஆட்சியில் எத்தனை அட்ராசிட்டிகள்? அண்ணா யுனிவர்சிட்டி கேஸ்ல இருந்து, இன்றைக்கு அஜித் குமார் அவர்கள் கேஸ் வரைக்கும், எல்லாத்துக்கும் நீதிமன்றம் தலையிட்டு உங்கள் அரசை கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்க வேண்டும் என்றால், நீங்கள் எதற்காக சார்? உங்கள் ஆட்சி எதற்காக சார்? உங்களுக்கான அந்த சி.எம். பதவி எதற்காக சார்?”

இப்படி கேள்வி கேட்டாலும் உங்களிடம் இருந்து எந்த பதிலும் வராது. ஏனென்றால், பதில் இருந்தால் தானே வரும்? அதிகபட்சம் உங்களிடமிருந்து வரும் பதில், “சாரி, தெரியாமல் நடந்துடுச்சு, இல்லைன்னா நடக்கக்கூடாது, நடந்திருக்கு, சாரிமா”, அவ்வளவுதானே? இந்த ‘வெற்றி விளம்பரம் மாடல் தி.மு.க. சர்க்கார்’ இப்போது ‘சாரிமா மாடல் சர்க்கார்’ ஆக மாறிவிட்டது. இந்த அரசில் நடந்த தவறுகளை சரிசெய்துவிடுங்கள். “நீங்கள் செய்த தப்புக்கு பரிகாரமாக சட்டம் ஒழுங்கை சரி செய்தே தீர வேண்டும். இல்லை என்றால், மக்களுடன் மக்களாக ஒன்றாய் நின்று உங்களைச் சரி செய்யவைப்போம், நன்றி. இவ்வாறு விஜய் தெரிவித்தார்.

விஜய் வெளியே வா, வெளியே வா என்று சொன்னீர்களே, இப்போது வெளியே வந்துவிட்டார். உங்களால் தாங்க முடியுமா? அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா? என நிட்டிசன்கள் திமுக அரசை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர்