வெற்றி உன் பின்னால் வரும்.. நிர்வாகிகளுக்கு பயிற்சி வகுப்புகள்.. 12500 தெருமுனை கூட்டங்கள்.. சராசரி அரசியலில் இருந்து மாறுபடும் தவெக.. முழுவீச்சில் இறங்குகிறார் விஜய்..!

தமிழகத்தில் இதற்கு முன் அரசியல் கட்சி ஆரம்பித்தவர்களின் வழியை பின்பற்றாமல், வித்தியாசமான முறையில் தனது கட்சியை வழிநடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த நிலையில், தற்போது தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள்…

vijay

தமிழகத்தில் இதற்கு முன் அரசியல் கட்சி ஆரம்பித்தவர்களின் வழியை பின்பற்றாமல், வித்தியாசமான முறையில் தனது கட்சியை வழிநடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த நிலையில், தற்போது தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாதாரணமாக பேசுவதற்கும், சமூக வலைத்தளங்களில் பேசுவதற்கும், மேடையில் பேசுவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது என்றும், நம்முடைய ஒவ்வொரு பேச்சையும் எதிரில் இருப்பவர்கள் முழு கவனத்துடன் கேட்கும் அளவுக்கு நம்முடைய பேச்சு இருக்க வேண்டும் என்றும், அதனால் மேடை பேச்சுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும் பனையூரில் தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், இந்த பயிற்சியை அரசியல் வல்லுநர்கள், தேர்தல் வியூக நிபுணர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், ஓய்வுபெற்ற அரசியல்வாதிகள் அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் பயிற்சிகளில் விஜய்யும் கலந்துகொண்டு, ஒவ்வொரு நிர்வாகியும் மக்களை கவரும் வகையில் எப்படி பேச வேண்டும் என்று கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில்12500 இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தெருமுனைக் கூட்டத்தில், நம்முடைய கட்சிகளின் கொள்கை என்ன, மக்களுக்காக நாம் என்ன செய்யப் போகிறோம், இரண்டு திராவிடக் கட்சிகளும் மாறி மாறி 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை எப்படி சீரழித்தன, அதைச் சீர் செய்வது எப்படி என்பது போன்ற விளக்கங்கள் மக்களுக்கு அளிக்கப்படும் என்றும், மிகவும் எளிமையாக, பாமர மக்களுக்கும் புரியும் படியாக தெருமுனை கூட்டங்களில் நிர்வாகிகள் பேச வேண்டும் என்றும், அதற்காகத்தான் இந்தப் பயிற்சி வகுப்புகள் என்றும் கூறப்படுகிறது.

ஆரம்ப காலத்தில் காமராஜர் இருந்தபோது இது போன்ற பயிற்சி வகுப்புகள் காங்கிரஸ் கட்சிகளில் எடுக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் தற்போதுதான் இந்த பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டு வருகிறது. “வெற்றிக்குப் பின்னால் போக வேண்டாம். உனக்கு பிடித்த வேலையை தேர்ந்தெடுத்து திறமையை வளர்த்துக் கொள். வெற்றி உன் பின்னால் வரும்” என்ற விஜய்யின் படத்திலேயே ஒரு வசனம் வந்தது போல், “செய்வதைத் திருந்த செய்ய வேண்டும்” மற்றும் “எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு” என்ற குறளுக்கு ஏற்ப தன்னுடைய நிர்வாகிகள் அனைவரும் செயல்பட வேண்டும் என்று விஜய் திட்டமிட்டுள்ளார்.

இதை அடுத்து, தமிழக மக்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான அரசியல்வாதியாக விஜய் பார்க்கப்படுகிறார் என்றும், கண்டிப்பாக அவருக்கு இந்த தேர்தலில் இல்லை என்றாலும், அடுத்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை மக்கள் கொடுப்பார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.