பொழுதுபோக்கு

நான் இந்த தருணத்தில் தான் இயக்குனர் ஆவேன்… கார்த்தி ஓபன் டாக்…

கார்த்தி தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகர் ஆவார். இவரது தந்தை சிவகுமார் மூத்த நடிகர் மற்றும் இவரது சகோதரர் சூர்யாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் நுழைந்து மணிரத்தினம் இயக்கிய ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் கார்த்தி.

அதைத்தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் கார்த்தி. முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்து அனைவரையும் பாராட்டுகளையும் பெற்று தந்தது. தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி மெட்ராஸ், போன்ற ஹிட் படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வளம் வந்தார் கார்த்தி.

பின்னர் கடைக்குட்டி சிங்கம், கைதி, சுல்தான் போன்ற நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தார் கார்த்தி. இது மட்டுமல்லாமல் பொன்னின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பல ரசிகர்களை பெற்றார். தற்போது பிஸியான நடிகராக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார் கார்த்தி.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி தான் இயக்குனர் ஆகும் தருணம் எப்போது என்பதை பற்றி பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், ஒரு படம் உருவாகுவதற்கு முக்கியமானது கதை தான். அதனால் எனக்காக இந்த கதையை கூற வேண்டும் மக்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்று எப்போது தோன்றுகிறதோ அந்த நேரத்தில் தான் நான் இயக்குனர் ஆவேன் என்று கூறியிருக்கிறார் நடிகர் கார்த்தி.

Avatar photo
Meena