நடிகை நயன்தாராவுக்கும் அவரது கணவர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே பிரச்சனை என்றும், இருவரும் டைவர்ஸ் பெற்று பிரிய போவதாகவும், இரட்டை குழந்தைகளில் ஆளுக்கு ஒரு குழந்தையை வளர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் ஊடகங்களில் வதந்திகள் மிக வேகமாக பரவி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படத்தில் நயன்தாரா நடித்தபோதே விக்னேஷ் சிவன் அவரை காதலிக்கத் தொடங்கிவிட்டார் என்பதும், அதன் பிறகு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் காதலித்தவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள் என்பதும் நாம் அறிந்ததே. இந்த தம்பதிக்கு இரட்டைக் ஆண் குழந்தைகள் உள்ளது என்பதும் அனைவருக்கும் தெரியும். இந்த தம்பதிகள் மிகவும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறார்கள் என்பது அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தாலே தெளிவாகும். சமீபத்தில் கூட வெளிநாட்டுக்கு குடும்பத்தோடு சுற்றுப்பயணம் செய்து வந்த இந்த தம்பதிகள் தற்போது சென்னை திரும்பி, மீண்டும் அவ்வப்போது சில பதிவுகளை செய்து வருகின்றனர்.
ஆனால், கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இடையே பிரச்சனை ஏற்பட்டு விட்டதாகவும், இருவரும் பிரியப்போவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, நயன்தாரா ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில், “குறைந்த அறிவுடைய ஒருவரை திருமணம் செய்தால் திருமண வாழ்க்கை தவறாக மாறும். உங்கள் கணவரின் செயல்பாடுகளுக்கு நீங்கள் பொறுப்பல்ல. என்னை விட்டு விடுங்கள். நான் ஏராளமான பிரச்சனைகளை உங்களால் அனுபவித்து விட்டேன்” என்று தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து, அந்த பதிவை உடனே நீக்கிவிட்டதாக கூறப்படுவதுதான் இந்த வதந்திக்கு காரணம்.
உண்மையில், நயன்தாரா அப்படி ஒரு பதிவை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்யவே இல்லை. அவருக்கு பிடிக்காதவர்கள் வேண்டுமென்றே இப்படி ஒரு போலியான பதிவை செய்து உடனே அதை நீக்கிவிட்டதாகவும், வதந்தியை கிளப்பி விட்டதால் தான் ஊடகங்களில் இந்த டைவர்ஸ் செய்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் நயன்தாரா தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்றும், சமீபத்தில் கூட பழனி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், விக்னேஷ் சிவன் அடுத்த பட வேலைகளில் பிசியாக இருப்பதும், நயன்தாராவும் நான்கு படங்களில் நடித்துக் கொண்டு பிஸியாக இருந்தாலும், அவர்களுடைய குடும்ப வாழ்க்கையில் எந்தவித புயலும் இல்லை என்றும், மனப்பிரச்சினை, பணப்பிரச்சினை உட்பட எதுவுமே இல்லாமல் இருக்கும் நிலையில், சிலர் வேண்டுமென்றே இப்படி ஒரு வதந்தியை கிளப்பி விட்டு குளிர் காய்கிறார்கள் என்றும் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
20 ஆண்டுகளுக்கு மேலாக நயன்தாரா தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் நிலையில், அவரை பார்த்து பொறாமைப்படும் சிலர்தான் இந்த மாதிரி வதந்திகளை கிளப்பி விட்டு இருக்கலாம் என்றும், குறிப்பாக நயன்தாரா பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்க மாட்டார், படங்களின் ப்ரோமோஷனுக்கு வர மாட்டார், தன்னை பற்றிய வதந்திகள் பரப்புபவர்களுக்கு பதிலடி கொடுப்பார் என்ற காரணத்தினால் அவரை பிடிக்காதவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும், அதனால்தான் அவர்களால் கிளப்பி விடப்பட்ட வதந்திதான் இந்த டைவர்ஸ் விவகாரம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மொத்தத்தில், சந்தோஷமாக இருக்கும் ஒரு குடும்பத்தில் ஒரு வதந்தியை கிளப்பி அவர்களை பிரிக்க முயற்சி செய்வதில் அப்படி என்னதான் சந்தோஷம் என தெரியவில்லை என ரசிகர்கள் கொந்தளிப்பாக சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
