ஒரே கல்லில் 2 மாங்காய்.. திமுகவை தாக்குவதற்கும் அதிமுகவை தாக்காததற்கும் ஒரே காரணம்.. விஜய்யின் ராஜதந்திரம்..

ஜெயலலிதாவுக்கு அடுத்து விஜய்க்கு தான் கூட்டம் கூடும்.. மற்ற கூட்டம் எல்லாம் காசு கொடுத்து அழைத்து வரப்பட்டது.. ஓட்டு இல்லாவிட்டாலும் குழந்தைகளால் கிடைக்கும் வெற்றி..! ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக நடிகர் விஜய்க்குத்தான் அதிக கூட்டம் கூடும்…

vijay dmk admk

ஜெயலலிதாவுக்கு அடுத்து விஜய்க்கு தான் கூட்டம் கூடும்.. மற்ற கூட்டம் எல்லாம் காசு கொடுத்து அழைத்து வரப்பட்டது.. ஓட்டு இல்லாவிட்டாலும் குழந்தைகளால் கிடைக்கும் வெற்றி..!

ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக நடிகர் விஜய்க்குத்தான் அதிக கூட்டம் கூடும் என்றும், அவர் ஒரு இடத்துக்கு வருகிறார் என்றால், காசு கொடுக்காமலேயே தானாகவே கூடும் கூட்டம் அதுவாகத்தான் இருக்கும் என்றும், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தலைவர்கள் வந்தால் அவர்களது கட்சியினர் காசு கொடுத்து அழைத்து வரும் கூட்டமாக இருக்கும் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் மூலம் விஜய் பெறும் வாக்குகள்

மேலும், பொதுமக்களின் வாக்குகள் எப்படி விஜய்க்கு போகிறது என்றால், அது குழந்தைகள் மூலமாகத்தான் என்று கூறிய அவர், “குழந்தைகளுக்கு ஓட்டு இல்லை என்றாலும், குழந்தைகள் மத்தியில் விஜய் பிரபலமாகிவிட்டார். எனவே, அந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் விஜய்க்கு ஓட்டு போடுவார்கள்” என்றும் அவர் கூறினார்.

“2021 ஆம் ஆண்டு தேர்தலில் ‘ஸ்டாலின் தான் வர்றாரு.. விடியல் தரப்போறாரு’ என்ற பாடல் குழந்தைகள் மூலம் தான் ஹிட் ஆனது என்றும், அதன் பிறகுதான் பெரியவர்களுக்கு அந்த பாடல் போய்ச் சேர்ந்தது என்றும், அதை வைத்து ஏராளமான வாக்குகள் தி.மு.க.வுக்குக் கிடைத்தது” என்றும் தராசு ஷ்யாம் கூறினார்.

அதேபோலத்தான், “விஜய்க்கு ஏராளமான குழந்தைகள் ரசிகர்கள் உள்ளனர் என்றும், அவர்களுக்கு ஓட்டு இல்லை என்றாலும், அவர்கள் மூலம் அவர்களது பெற்றோர்கள் கண்டிப்பாக விஜய்க்கு வாக்களிப்பார்கள் என்றும், ஒருவேளை விஜய் வெற்றி பெற்றால் அது குழந்தைகளால் கிடைக்கும் வெற்றியாகத்தான் இருக்கும்” என்றும் அவர் கூறினார்.

அ.தி.மு.க.வை விஜய் ஏன் தாக்கிப் பேசுவதில்லை?

அ.தி.மு.க.வை விஜய் தாக்கி பேசவில்லை என்று கூறப்படும் விமர்சனங்களுக்கும் அவர் விளக்கம் அளித்தார். “அ.தி.மு.க.வை பொருத்தவரை எம்.ஜி.ஆர். வாக்குகளை விஜய் கவர வேண்டும் என்று நினைக்கிறார். எனவே, அ.தி.மு.க.வை தாக்கினால் அந்த தொண்டர்கள் வருத்தப்படுவார்கள் அல்லது கோபப்படுவார்கள் என்று அ.தி.மு.க.வின் வாக்குகளை அபகரிப்பதற்காகத்தான் அ.தி.மு.க.வை தாக்காமல் விஜய் பேசி வருகிறார்” என்றும் அவர் புதிய விளக்கம் கொடுத்தார்.

“தி.மு.க.வை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் அனுதாபிகள் கண்டிப்பாக விஜய்க்கு வாக்களிக்க மாட்டார்கள். எனவேதான், தி.மு.க.வை அவர் தாக்கிப் பேசுகிறார். தி.மு.க.வை தாக்கிப் பேசுவதற்கு முக்கிய காரணம், தி.மு.க.வின் எதிர்ப்பு ஓட்டுக்களை மொத்தமாக அள்ளலாம் என்ற எண்ணமும் விஜய்க்கு உள்ளது. அ.தி.மு.க. எதிர்ப்பு ஓட்டு என்பது தி.மு.க.வின் ஓட்டு என்பதால், அந்த வாக்குகளை அவர் கவனம் செலுத்தாமல், தி.மு.க.வின் எதிர்ப்பு ஓட்டையும், அ.தி.மு.க.வின் ஆதரவு ஓட்டையும் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்கிறார்” என்றும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, “விஜய் எந்த கட்சியின் வாக்குகளை அதிகமாகப் பிரிப்பார் என்பதுதான் இப்போது அரசியல் விமர்சகர்கள் போட்டு வரும் கணக்காக இருக்கிறது என்றும், அ.தி.மு.க., தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் என ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின் வாக்குகளையும் அவர் பிரிக்கிறார் என்றும், அதனால் இந்தத் தேர்தல் விஜய்க்கான தேர்தலாக இருக்கும்” என்றும் பல அரசியல் விமர்சகர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்தனர்.

ஒரு பக்கம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய நிலையில், இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார். ஆனால், இன்னும் விஜய் எந்த பிரச்சாரத்தையும் தொடங்காமல் அமைதியாக இருக்கிறார் என்றாலும், செப்டம்பர் முதல் அவரது பிரச்சார பயணம் வீரியமாக இருக்கும் என்றும், இரண்டு திராவிட கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்பும் அளவுக்கு அவரது பிரச்சாரம் இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.