நடிகர் விஜய்யை எதிர்த்து திமுக ஒரு பெரிய நடிகரை களம் இறக்க இருப்பதாகவும், விஜய் போட்டியிடும் தொகுதியில் அந்த நடிகர் போட்டியிடுவார் என்றும் ஏற்கனவே ஒரு சில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்த நிலையில், அந்த நடிகர் யாராக இருக்கும் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தங்களுடைய கற்பனைகளை தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வதந்தியும் மிக வேகமாக பரவி வருவது அரசியல் வட்டாரத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் நான்காவது கூட்டணியாக தமிழகத்தில் உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியும், அந்த கட்சியின் கூட்டணி கட்சிகளும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. விஜய்யும் இந்த தேர்தலில் போட்டியிடுவார் என்றும், அவர் முதலமைச்சர் வேட்பாளர் என பிரகனப்படுத்தப்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய் போட்டியிடும் தொகுதி ரகசியமாக வைக்கப்படும் என்றும், கடைசி நேரத்தில் தான் அவர் நாமினேஷன் செய்வார் என்றும் கூறப்படுகிறது.
விஜய் சென்னையில் போட்டியிட வாய்ப்பே இல்லை என்றும், அதேபோல் தென் மாவட்டங்களில் அவர் போட்டியிட மாட்டார் என்றும், வன்னியர் அதிகமாக இருக்கும் பகுதியில் தான் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக வெற்றி கழகத்தின் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில், விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து, தான் சந்தித்த முதல் தேர்தலில் அவர் மட்டுமே விருத்தாச்சலத்தில் ஜெயித்தார். அதேபோல் விஜய் மட்டும் தான் இந்த தேர்தலில் ஜெயிப்பார் என்று ஒரு சில அரசியல் விமர்சனங்கள் கூறிவரும் நிலையில், விஜயகாந்த் போல் விஜய்யை ஜெயிக்க விடக்கூடாது என திமுக கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
எனவே தான் விஜய் போட்டியிடும் தொகுதியில் ஒரு பெரிய நடிகரை போட்டியிட வைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ரகசிய பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. திமுக கூட்டணிகளில் கமல்ஹாசன் இருந்தாலும், அவர் ராஜ்யசபா எம்.பி ஆகிவிட்டால் அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை. அடுத்ததாக, விஜய்க்கு நிகராக ரசிகர்களை வைத்திருப்பவர் அஜித். ஆனால், அவர் அரசியல் பக்கமே வரமாட்டார் என்பதும், தேர்தல் அரசியலில் ஈடுபட வாய்ப்பே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் அரசியலே வேண்டாம் என்று எப்போதே ஒதுங்கி விட்டார்.
இந்த நிலையில், ரஜினி, கமல், அஜித்தை அடுத்த இடத்தில் உள்ள ஒரு நடிகரிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விஜய்க்கு நிகராக அவருக்கு ரசிகர்கள் இல்லை என்றாலும், அவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் கடந்த ஆட்சியில் சில சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தவர் என்பதும், அவருடைய மனைவியும் அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே, விஜய்க்கு எதிராக போட்டியிடும் நடிகர் அவராகத்தான் இருக்கும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவு செய்து வந்தாலும், இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், விஜய்க்கு எதிராக போட்டியிடும் நடிகர் யாராக இருக்கும் என்பதை அறிய விஜய் ரசிகர்களே ஆவலுடன் இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.
DMK’s Plan Against Vijay: A Star Face-off?
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
