சிக்ஸர் அடித்த பிரதீப் ரங்கநாதன்… வெளிவரும் முன்னரே லாபம் பார்த்த டியூட் திரைப்படம்…

பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர் மற்றும் நடிகராவார். இவர் ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கியதன் மூலம் தனது சினிமாவில் தனது கேரியரை தொடங்கினார். அதற்கு பிறகு படத்தொகுப்பு உதவி இயக்குனர் என…

pradeep ranganathan

பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர் மற்றும் நடிகராவார். இவர் ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கியதன் மூலம் தனது சினிமாவில் தனது கேரியரை தொடங்கினார். அதற்கு பிறகு படத்தொகுப்பு உதவி இயக்குனர் என பல பணிகளை செய்து வந்தார்.

2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்ற திரைப்படத்தை இயக்கினார் பிரதீப் ரங்கநாதன். இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு லவ் டுடே என்ற படத்தை இயக்கி அதன் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். இந்த படமும் வெற்றி பெற்றது அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அடுத்ததாக டிராகன் திரைப்படத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார் பிரதீப் ரங்கநாதன். அதை தொடர்ந்து நாயகனாக பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.

இந்நிலையில் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் திரைப்படம் வெளிவர இருக்கிறது. இந்த படத்தை பற்றிய தகவல் தான் வெளியாகியிருக்கிற து. அது என்னவென்றால் டியூட் திரைப்படம் வெளி வருவதற்கு முன்பே லாபத்தை ஈட்டி இருக்கிறது. டியூட் படத்தின் ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் 25 கோடிக்கு வாங்கியுள்ளது. அதனால் வெளிவருவதற்கு முன்னரே லாபம் என்ற ஜோனில் டியூட் திரைப்படம் சென்று விட்டது. இந்த திரைப்படம் கண்டிப்பாக ஹிட் ஆகும் என்றும் கூறப்படுகிறது.