விஜய் போட்டியிடும் தொகுதியில் ஒரு பெரிய நடிகரை திமுக நிறுத்தும்: விஜய் ஜெயிக்க வாய்ப்பில்லை.. ரவீந்திரன் துரைசாமி

விஜயகாந்த் தனது அரசியல் கட்சியை தொடங்கி முதல் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றார். ஆனால், விஜய் அந்த ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற மாட்டார் என்றும், விஜய் கட்சிக்கு ஒரு…

vijay ravindhran

விஜயகாந்த் தனது அரசியல் கட்சியை தொடங்கி முதல் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றார். ஆனால், விஜய் அந்த ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற மாட்டார் என்றும், விஜய் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட கிடைக்க வாய்ப்பில்லை என்றும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“விஜய்க்கு எத்தனை சதவீதம் வாக்குகள் இருக்கின்றன என்பதை உறுதி செய்யாமல் எந்த அரசியல் கட்சியும் அவருடன் கூட்டணிக்கு வராது என்று நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். அதேதான் இப்போதும் சொல்கிறேன். விஜய்யுடன் எந்த கட்சியும் கூட்டணிக்கு வராது,” என்று ரவீந்திரன் துரைசாமி மீண்டும் தெரிவித்தார். அதிகபட்சமாக அன்புமணி ராமதாஸ் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் மட்டுமே கூட்டணிக்கு வருவார்கள் என்றும், அவர்கள்கூட விஜய்யுடன் கூட்டணி சேரப் போகிறேன் என்று சொல்லி பேரம் பேசுவதற்காக மட்டுமே விஜய்யை பயன்படுத்துவார்கள் என்றும், மொத்தத்தில் விஜய்யுடன் யாரும் கூட்டணிக்கு வர வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.

“பவன் கல்யாண் போல விஜய் இந்த தேர்தலில் தன்னுடைய வாக்கு சதவீதத்தை நிரூபித்து 10 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பெற்றால், அடுத்த தேர்தலில் கூட்டணி வைக்க சில கட்சிகள் வரும் என்றும் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்தார். அவர் சொன்னது போலவே, இதுவரை விஜய்யுடன் கூட்டணி சேர எந்த கட்சியும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் என பல கட்சிகள் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டாலும், எந்த கட்சியும் விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வருகிறோம் என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், விஜய் எந்த தொகுதியில் தேர்தலில் போட்டியிடுகிறாரோ, அதே தொகுதியில் கோலிவுட் திரை உலகின் முன்னணி நடிகர் ஒருவரை தி.மு.க. களம் இறக்கும் என்றும், எனவே விஜய்யை தி.மு.க.வை ஜெயிக்க விடாது என்றும் ரவீந்திரன் துரைசாமி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தத்தில் விஜயகாந்த் போல் விஜய் மட்டுமாவது வரும் தேர்தலில் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.